fbpx

மருமகளுக்காக கர்ப்பம் தறித்த மாமியார்!… மகன் குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி!

அமெரிக்காவில் பெண் ஒருவர் மகன் மற்றும் மருமகளுக்காக வாடகைத் தாயாக குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வசிக்கும் நான்சி ஹேக் வெப் டெவலப்பராக இருந்து வருகிறார். இவருக்கு ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும் உள்ளனர். இந்த நிலையில் மருமகள் கேம்பரியாவால் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மிகுந்த வருத்ததிற்கு ஆளானார்கள். இந்த நிலையில் தான் மருமகளுக்காக வாடகைத் தாயாக மாமியார் நான்சி மாறியுள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹன்னா என்ற அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுக்குறித்து மனம் திறந்த நான்சி, தனது மகன் மற்றும் மருமகள் குழந்தைக்காக ஏங்கியது தனக்கு வருத்த அளித்ததாக தெரிவித்தார். அவர்கள் மகிழ்ச்சிக்காக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இன்று நான்சி தனது மகன் மற்றும் மருமகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நான்சி தனது குடும்பத்தினருடன் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த குடும்பம் மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்படுகிறது.

Kokila

Next Post

மருத்துவமனை குளியலறையில் பெண் டாக்டர் ஆபாச படம்.! கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி.! அதிர்ச்சியில் நிர்வாகிகள்.!

Sat Dec 9 , 2023
மும்பையின் செம்பூர் பகுதியில் இயங்கி வரும் சதாப்தி கல்லூரி மருத்துவமனை விடுதியில் பெண் டாக்டர் குளிக்கும் போது அதனை வீடியோ எடுத்ததாக துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பை சதாப்தி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருபவர் அசோக் குப்தா. இவர் அந்தக் கல்லூரியில் […]

You May Like