திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வேலை செய்பவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கோனிகா கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவு ஒற்றுக்கொள்ளாமல் வாந்தி எடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளித்த பிறகும் தொடர்ந்து கோனிகாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. மேற்படி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
திருச்சி மருத்துவமனையில் இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.