fbpx

பள்ளி மாணவிகளிடம் சேட்டை செய்த இளைஞர்….! பொதுமக்கள் செய்த செயலால் கதறல்…..!

தற்போதைய காலகட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி போன்றவற்றில் படிக்கும் மாணவிகள் நிம்மதியாக வீடு திரும்ப முடியாத சூழல் இருக்கிறது.

உதாரணமாக, ஒரு மாணவி பள்ளியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருக்கும் போது அவருக்கு தற்கால இளைஞர்களால், பல்வேறு இன்னல்கள் வந்து சேர்கிறது. அதில் ஒன்றுதான் ஈவ்டீசிங் அல்லது ஆபாசமாக சைகை செய்வது, நடுரோடு என்று கூட பார்க்காமல், கையை பிடித்து இழுப்பது போன்றவை ஆகும்.

சில போதை ஆசாமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள், அவர்களால் தான் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒருபுறம் சொல்லப்பட்டாலும், இன்னொரு புறம் தற்காலத்து இளைஞர்கள் சுய கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுவதால், பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில், ராணிப்பேட்டையில், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமான முறையில், சைகை காட்டியதால், பயந்து போன மாணவிகள் செய்த செயலால், அந்த இளைஞருக்கு தர்ம அடி கிடைத்துள்ளது. அந்த பகுதியில் இருக்கும் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் படிக்கும் மாணவிகள் சிலர், பள்ளி முடிவடைந்து, வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அந்த மாணவிகளை பார்த்து, அருவருக்குத்தக்க விதத்தில் சைகை செய்துள்ளார். இதனால் திகைத்துப் போன மாணவிகள், உடனடியாக அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அந்த இளைஞர் செய்த செயல் பற்றி தெரிவித்து கண்கலங்கி உள்ளனர்.

மாணவிகள் கண்கலங்கி நிற்பதை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள், மாணவிகளை அரவணைப்போடு, ஆறுதல் தெரிவித்ததோடு, அந்த இளைஞரை நோக்கி வேக, வேகமாக வரத் தொடங்கினர். இதை கவனித்த இளைஞர், தனக்கு நடக்கப் போகும் விபரீதத்தை அறிந்த காரணத்தால், அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.

ஆனாலும், அந்த இளைஞரை விடாமல், பொதுமக்கள் அவரை பின்தொடர்ந்து, துரத்திச் சென்று, ஒரு வழியாக மடக்கிப்பிடித்தனர். அதன்பிறகு, அந்த இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக அவரை தாக்கத் தொடங்கினர் பொதுமக்கள். போதும், போதும் என்ற அளவிற்கு அந்த இளைஞரை நையப்புடைத்த பொதுமக்கள், அதன் பிறகு, காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த இளைஞரை பொதுமக்களிடமிருந்து மீட்டு, அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்பு அவரிடம் காவல்துறையினர் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த இளைஞரின் பெயர் வேலூர் பகுதியைச் சேர்ந்த, சந்தோஷ் என்பதும், இவர் படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையின் மூலமாக தெரிய வந்தது.

அதன் பிறகு காவல்துறையினர் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். மாணவிகளிடம் ஆபாசமான முறையில் சைகை காட்டிய இளைஞரை, பொதுமக்கள் கூடி, நைய புடைத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விசாரணையில் அந்த இளைஞர் பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (20) என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ படித்துவிட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர்.

Next Post

நிபா வைரஸ் எதிரொலி...! எல்லை மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிர படுத்த கர்நாடகா அரசு உத்தரவு...!

Fri Sep 15 , 2023
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கர்நாடக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கேரளாவின் எல்லையோர மாவட்டங்களான குடகு, தட்சிண கன்னடா, சாம்ராஜநகரா மற்றும் மைசூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக கர்நாடகாவிற்குள் நுழையும் இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கேரள மாநிலத்தின் காழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் […]

You May Like