fbpx

உஷார்!!! கோதுமை மாவை இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது…

பைல்ஸ் (மூலம்), சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். போதுமான நார்ச்சத்து இல்லாத உணவு முறை, குறைந்த அளவு நீர் அருந்துதல், உடல் பருமன், மலச்சிக்கல்,
நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. பைல்ஸ் வந்து விட்டால், ஆசனவாய் பகுதியை சுற்றி வீக்கம் மற்றும் புண்கள் ஏற்பட்டு மிகுந்த வேதனை ஏற்படும். மற்றவர்களை போல் இல்லாமல், பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் தங்களின் உணவில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடவே கூடாது. ஏனென்றால், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது ஆசனவாயில் இருந்து அதிக இரத்தபோக்கு அல்லது எரிச்சல் உண்டாகும். பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிடும்போது, வயிறு பிடிப்பு மற்றும் மலச்சிக்கல் உண்டாகும். குறிப்பாக, பைல்ஸ் இருப்பவர்கள் கோதுமை மற்றும் கோழிக்கறியை தவிர்த்து விட வேண்டும்.

காரமான உணவுகள் மட்டும் இன்றி, எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா பொடிகள், காபி, டீ, மது பானங்கள் மற்றும் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். என்ன தான் நாங்கள் சாப்பிடுவது என்று உங்களுக்கு தோன்றலாம்… அதற்க்கு பதில், பச்சை இலை காய்கறிகள் தான். நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளான பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி, கீரை, பழங்கள் ஆகியவை அதிகம் சாப்பிட வேண்டும். இது போன்ற உணவு பழக்கங்களை நீங்கள் மாற்றினாலே பைல்ஸ் நோயை குணப்படுத்த முடியும்.

Read more: ராகி நல்லது தான்.. ஆனால் இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது!!!

.

English Summary

these people should never eat wheat

Next Post

பெண்களே எச்சரிக்கை!!! தாய்ப்பால் கொடுக்காத பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக புற்றுநோய்...

Mon Dec 30 , 2024
reason for breast cancer

You May Like