fbpx

”இதுதான் அதிர்ஷ்டம் போல”..!! கடனுக்கு வாங்கிய லாட்டரி..!! சுமை தூக்கும் தொழிலாளிக்கு அடித்தது ஜாக்பாட்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால் (55). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தன்னுடைய சகோதரரின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். நாள் தோறும் சுமை தூக்கும் தொழிலாளர் நல சங்கத்திற்கு சென்று, வேலைக்காக காத்திருப்பது பாபுலாலின் வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு அங்கு காத்துக்கொண்டிருந்த அவரிடம், அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் பெண் வந்துள்ளார்.

கேரள அரசின் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டுகள் தன்னிடம் இருப்பதாகவும், குலுக்கல் தேதி நெருங்கிவிட்டதால் லாட்டரி சீட்டுகள் தேங்கி விட்டதாகவும் கூறிய அப்பெண் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு பாபுலாலிடம் கூறியுள்ளார். எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ள பாபுலால், தற்போது தன்னிடம் லாட்டரி வாங்க பணம் இல்லை என்றும் அடுத்த குலுக்கலில் வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தற்போது லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறும், அவற்றுக்கான பணத்தை பிறகு பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். பின்னர், இரண்டு லாட்டரி சீட்டுகளை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று கேரள அரசின் லாட்டரி சீட்டுகளுக்கான குலுக்கல் நடந்த நிலையில், பாபுலால் வைத்திருந்த லாட்டரிக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்துள்ளது. பணமே கொடுக்காமல் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்ததை அறிந்த பாபுலால், இது தன்னை தேடி வந்த அதிர்ஷ்டம் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Chella

Next Post

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு...! மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும்...!

Thu Mar 23 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like