இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வரை தூங்கும் அரிய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் Castleford நகரத்தைச் சேர்ந்த 38 வயதான ஜோனா காக்ஸ், தன்னை நிஜ வாழ்க்கையில் தூங்கும் அழகி என்று அழைக்கப்படுகிறார். இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்பது ஒரு நரம்பியல் தூக்கக் கோளாறு ஆகும். இது ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் ஒரு நபருக்கு தூக்கத்தை ஏற்படுத்தும். இந்த கோளாறு மக்களை சோர்வடையச் செய்கிறது. இந்த நோய்க்கு சிகிச்சைகள் இருந்தாலும், இந்த நிலைக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அறிய வகை நோய் பாதித்து ஜோனா தினமும் அவதிப்பட்டு வருகிறார். அக்டோபர் 2021 இல் இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா இருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது, ஒரு நாளில் சுமார் 22 மணி நேரம் தூங்கும் இந்த பெண், கடந்த 2017 ஆம் ஆண்டு தான் முதலில் தான் மிகவும் சோர்வாக இருப்பதை உணர தொடங்கினார். இதனை அடுத்து அவருக்கு எப்போதுமே தூக்கம் வந்து கொண்டே இருந்தது, கார், கிளப், வேலை செய்யும் இடம் என எங்கும் அவர் தூங்கிக் கொண்டே இருந்தார். இதன் காரணமாக அவர் தான் வேலையை விட்டுவிட்டு வீட்டில் தூக்கம் வந்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். பல மருத்துவர்களிடம் சென்ற நிலையில், பலனற்ற ஆலோசனைகள் மற்றும் சிகிச்சையை ஜோனா பெற்றார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அவரது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் ஒரு சில மணி நேரங்கள் அவர் விழித்திருந்தாலே அது மிகப்பெரிய விஷயமாகவும் தெரிகிறது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானதை கூட செய்ய முடியவில்லை என்றும், தனக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்போது தூங்கினேன்? எப்போது எழுந்தேன்? என்பதே எனக்கு தெரியவில்லை என்றும் இன்றைய தினம் என்ன? என்று கூட எனக்கு தெரியாது என்றும் அந்த அளவுக்கு நான் என்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்