திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 109 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் மற்றும் தகுதிகள்:
1. தட்டச்சர் (1 இடம்) : சம்பளம்: ரூ.18,500 – ரூ.58,600தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் & ஆங்கில தட்டச்சு தேர்ச்சி, கணினி பயிற்சி சான்றிதழ்
2. காவலர் : (70 இடம் – ஆண்கள்: 60, பெண்கள்: 10)சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400. தகுதி: தமிழில் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
3. கூர்க்கா : (2 இடம்) சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 தகுதி: தமிழில் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. ஏவலாள் : (2 இடம் – பண்ணை சாகுபடி) சம்பளம்: ரூ.10,000 – ரூ.31,500 தகுதி: தமிழில் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5. உபகோயில் தூய்மை பணியாளர் (2 )சம்பளம்: ரூ.10,000 – ரூ.31,500 தகுதி: தமிழில் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. கால்நடை பராமரிப்பாளர் (1 இடம்)சம்பளம்: ரூ.10,000 -ரூ.31,500 தகுதி: தமிழில் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. உபகோயில் காவலர் (2 இடம்)சம்பளம் : ரூ.11,600 – ரூ.36,800 தகுதி: தமிழில் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
8. திருமஞ்சனம் (3 இடம்)சம்பளம்: ரூ.11,600 – ரூ.36,800தகுதி: ஆகம/வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பு
9. முறை ஸ்தானீகம் (10 இடம்) சம்பளம்: ரூ.10,000 – ரூ. 31,500தகுதி: ஆகம/வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பு
10. ஒடல் (2 இடம்)சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400தகுதி: ஆகம/வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பு.
11. தாளம் (3 இடம்)சம்பளம்: ரூ.18,500 – ரூ.58,600தகுதி: ஆகம/வேத பாடசாலையில் ஓராண்டு படிப்பு.
12. தொழில் நுட்ப உதவியாளர் (மின்னணு & தொலைத்தொடர்பு) (1 இடம்)சம்பளம்: ரூ.20,600 – ரூ.65,500தகுதி: மின்னணு & தொலைத்தொடர்பு பொறியியல் பட்டயம்.
13. பிளம்பர் (4 இடம்)சம்பளம்: ரூ.18,500 – ரூ.58,600தகுதி: ITI (Plumbing Trade), 5 வருட அனுபவம்
14. உதவி மின் பணியாளர் (2 இடம்)சம்பளம்: ரூ.16,600 – ரூ.52,400 தகுதி: ITI (Electrician), 5 வருட அனுபவம் வேண்டும்
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.பணிக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அடையாள அட்டை (ஆதார், வாக்காளர்), குடும்ப அட்டை ஆகியவை சுயசான்றொப்பம் செய்யப்பட்டு இணைக்க வேண்டும்.