fbpx

TNWWHCLயில் காத்திருக்கும் தமிழக அரசின் வேலை வாய்ப்பு……! இந்த தகுதி போதும் விண்ணப்பிக்கலாம்……!

தமிழ்நாடு மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட்டில், தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரி பதவிக்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, ஒரே ஒரு இடம் தான் காலியாக இருக்கிறது. இந்த தலைமை செயல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விருப்பம் உள்ளவர்கள், அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனம் ஏதாவது ஒன்றில், ஏதாவது ஒரு துறையில், டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன், குறைந்தபட்சம் 15 வருடங்கள் hospitalityயில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தான், விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே தகுதியும், திறமையும் கொண்ட நபர்கள் தங்களுடைய முழுமையான விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, the chairman Tamilnadu working women,s hostels corporation ltd, No: 19 TP Scheme road RAPuram,chennai-28 என்ற முகவரிக்கு வரும் 17ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification

Next Post

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்……! சமையல் எரிவாயு சிலிண்டர் விலை……!

Tue Aug 8 , 2023
பொதுவாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை இந்தியாவை பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களால் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகம், அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால், இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையில், இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் மூலமாக இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி வருகிறது. ஆனாலும், மாதந்தோறும் […]

You May Like