fbpx

“பாரத ரத்னா” விருதை பெற்ற முதல் மனிதரும், இந்தியாவின் 2வது பிரதமருமான லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் இன்று!

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி வாழ்க்கை வரலாறு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

லால் பகதூர் சாஸ்திரி 2 அக்டோபர் 1904 அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் ஷரதா பிரசாத் மற்றும் ராம் துலாரி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை அலகாபாத்தில் உள்ள வருவாய் அலுவலகத்தில் எழுத்தராக பணிப்புரிந்து வந்தார். சாஸ்திரிக்கு ஒரு வயது இருந்தபோது அவரது தந்தை இறந்தார். சாஸ்திரிக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர் ‘கிழக்கு மத்திய ரயில்வே இண்டர் கல்லூரியில்’ தனது கல்லூரி படிப்பை பயின்றார். பின்னர் 1926 இல் ‘காஹி வித்யாபீத்தில்’ பட்டம் பெற்றார்.

சாஸ்திரியின் காலத்தில் இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடந்துக்கொண்டிருந்தது. சாஸ்திரி மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1920 இல் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டார். மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் இவர் சேர்ந்தார்.

அதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். சிறைக்கு சென்றிருந்தாலும் அவர் 1937 இல் உத்திர பிரதேசத்தின் நாடாளுமன்ற வாரியத்தின் செயலாளராக பணிப்புரிந்தார். பின்பு உப்பு சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக மேலும் ஒரு வருடம் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு அவர் மகாத்மா காந்தியின் ‘இந்தியாவை விட்டு வெளியேறு” இயக்கத்தில் சேர்ந்ததற்காகவும் ஜவர்ஹலால் நேருவின் வீட்டில் இருந்து சுதந்திர போராளிகளுக்கு அறிவுரை வழங்கியதற்காகவும் மீண்டும் 1942 இல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு சாஸ்திரி உத்திர பிரதேச காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து 1951 இல் அகில் இந்திய காங்கிரஸ் குழுவின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே அவர் ரயில்வே மற்றும் போக்குவரத்து கழக அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்திய ரயில்வே மற்றும் போக்குவரத்து அவரால் வளர்ச்சி அடைந்தது. ஆனால் 1952 இல் தமிழ்நாட்டில் நடந்த ஒரு ரயில் விபத்தின் காரணமாக 112 பயணிகள் இறந்தனர். அதற்கான பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு 1957 இல் மீண்டும் அவர் அமைச்சரவையின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அவர் மதிப்பு வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 இல் அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவர்ஹலால் நேரு இறந்தார். இதனால் அடுத்த தலைவர் யார்? என்கிற பேச்சு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.காமராஜ் பிரதமர் பதவிக்கு சாஸ்திரியின் பெயரை முன் வைத்தார். அதே ஆண்டு சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சாஸ்திரி பிரதமராக பதவியேற்ற பிறகு 1965 இல் இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தது. அபோது சாஸ்திரி நாட்டை வழிநடத்தினார். இந்த போரின் போதுதான் “ஜெய் ஜவான் ஜெய் கிஷன்” என்னும் வாசகத்தை அவர் முழங்கினார். விரைவிலேயே அது தேசிய முழக்கமாக எதிரொலித்தது.

1965 இல் பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதியான முஹம்மது ஆயூப்கானுடன் தாஷ்கண்டில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு அவர்கள் இருவரும் ‘தாஷ்கண்ட்’ பிரகடனத்தில் கையெழுத்திட்டார். முக்கிய பிரச்சனையான உணவு பற்றாகுறையை குறைக்க சாஸ்திரி பசுமை புரட்சி என்ற ஆக்கப்பூர்வமான திட்டத்தை செயல்ப்படுத்தினார். இப்போது வரை அந்த திட்டம் நல்ல பயனளித்து வருகிறது.

சாஸ்திரி 1928 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரை சேர்ந்த லலிதா தேவியை திருமணம் செய்தார். அவருக்கு குசும், ஹரி கிரஷ்ணா, சுமன், அனில், சுனில், அசோக் என ஆறு குழந்தைகள் பிறந்தனர். அதில் அசோக்கிற்கு 37 வயதாக இருந்தபோது லால் பகதூர் சாஸ்திரி இறந்தார். தஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக சாஸ்திரி இறந்தார். அவரது மரணம் ஒரு மர்மமாகவே உள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த கெளரவமான விருதான பாரத ரத்னா விருதை பெற்ற முதல் மனிதர் என்ற பெருமையை சாஸ்திரி பெற்றுள்ளார்.

Kokila

Next Post

இம்மாத இறுதியில் ஆரம்பமாகிறது வடகிழக்கு பருவமழை!… தென் மாநிலங்களில் 112% வரை மழை பெய்ய வாய்ப்பு!

Mon Oct 2 , 2023
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே. குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும். இந்தநிலையில், இந்தாண்டு ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது. வரும், 15ம் தேதி அளவில், தமிழகம் உள்ளிட்ட […]

You May Like