fbpx

மகாராஷ்டிராவில் வெற்றி வாகை சூடப்போவது யார்? NDA – INDIA கூட்டணி இடையே கடும் போட்டி!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய நிலையில், மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. 

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.

கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா இரண்டையும் பாஜக உடைத்தது. இதனால் இரண்டு அணிகள் உருவாகின. சின்னங்கள் மாறின. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் எந்த அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கும்.. எந்த அணியை உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  ஏக் நாத் சின் டே சிவசேனா பிரிவை விட,  உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

அதே போல அஜித் பவர் தரப்பு தேசியவாத காங்கிரசை விட,  சரத் பாவாரின் தேசியவாத காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது.  உத்தரப்பிரதேசத்தில் பாஜக 39 தொகுதிகளிலும்,  சமாஜ்வாதி கட்சி 17 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை முன்னிலை வகிக்கிறது.

English Summary

english summary

Next Post

Lok Sabha Election Results 2024 | வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை..!!

Tue Jun 4 , 2024
Prime Minister Modi is once again leading in Varanasi constituency.

You May Like