fbpx

நீ என் அருகில் படுக்காதே….! நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பட்டியலின நபர், திருச்சி அருகே பயங்கரம்…..!

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரை கொடூரமாக கொலை செய்த, அவருடைய நண்பருக்கு, ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.

திருச்சி, உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் யாசகம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவருடன் இணைந்து, ஈரோடு மாவட்டம் காசிபாளையம், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முருகேசன் (40) என்ற நபரும் யாசகம் பெறுவது வழக்கம்.

இந்த நிலையில் தான், இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால், கந்தசாமி, பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அறிந்து கொண்டதை தொடர்ந்து, முருகேசன் அவரிடம் இருந்து, விலகத் தொடங்கினார். ஆனாலும், கந்தசாமி எப்போதும் போலவே பழகி இருக்கிறார்.

ஆனால், யாசகம் பெறுவதில், இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரம், முருகேசனுக்கு மிகுந்த ஆத்திரத்தை கிளப்பி இருக்கிறது. அதோடு, சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி இரவு ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் அருகே முருகேசன் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, வழக்கம் போல அவருக்கு அருகே சென்று கந்தசாமி உறங்க முயற்சித்துள்ளார். ஆனால், என் அருகே படுக்காதே என்று முருகேசன் தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து, முருகேசன் கந்தசாமியின் ஜாதி பெயரை சொல்லி, வசை பாடி உள்ளார். மேலும், அருகில் கிடந்த சிமெண்ட் கான்கிரீட் கல்லை எடுத்து கந்தசாமியின் தலையிலும், முகத்திலும் அடித்திருக்கிறார். இதனால், சம்பவ இடத்திலேயே கந்தசாமி, ரத்த வெள்ளத்தில், சுருண்டு, விழுந்து, பரிதாபமாக, உயிரிழந்தார். இது தொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் அரங்கநாதன் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, முருகேசனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தான், பட்டியலின சமூகத்தை சேர்ந்த கந்தசாமி, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பதிவுசெய்யப்பட்ட வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வ முத்துமாரி, முருகேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Next Post

திடீரென உயர்ந்த அரசு விரைவுப் பேருந்து கட்டணம்..!! உயரதிகாரிகளின் உத்தரவாம்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Tue Aug 8 , 2023
நாகர்கோவில், கன்னியாகுமரி, குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் சென்னை, பெங்களூரு, திருப்பதி, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, கொடைக்கானல், ஊட்டி, ஓசூர் போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் விரைவு போக்குவரத்து கழகம் என்ற பெயரில் விரைவு பேருந்துகள் செயல்பட்டு வந்த காலத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த […]

You May Like