மனிதர்களாக பிறந்த அனைவருமே என்றும் இளமையான தோற்றத்துடன் இருப்பதையே விரும்புவார்கள். வேலை பளு மற்றும் பிற காரணங்களால் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி இளமையிலேயே வயது முதிர்ந்த தோற்றமும் ஏற்படும். நமது சரும ஆரோக்கியத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது சருமத்தையும் முகத்தோற்றத்தையும் என்றும் இளமையோடு வைக்கலாம்.
தயிர் சரும ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கியமான ஒரு உணவாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. இவை நமது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருப்பது ஒரு சுருக்கங்கள் விழுவதையும் தடுக்கும். ஆரஞ்சு முகப்பொலிவிற்கு மற்றொரு சிறந்த உணவு. இதில் வைட்டமின்கள் சிட்ரிக் ஆசிட் மற்றும் பீட்டா கரோட்டின்களும் அதிக அளவில் காணப்படுகிறது. இவை கலோஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக சருமம் பொலிவுடன் இருக்க நமது உணவில் ஆரஞ்சு பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒமேகா-3 கொழுப்பு சத்துக்களும், சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மீன்களிலும் மற்றும் உலர் பழங்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த ஒமேகா 3-யில் புரதச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்து இருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நமது சருமத்தின் அழகு கூடுவதோடு இளமை தோற்றம் என்றுமே இருக்கும்.
பெர்ரி பழங்களும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பவை. ஸ்ட்ராபெரி ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகிய பழங்களில் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகளும் தாதுக்களும் அதிக அளவில் நிறைந்து இருக்கின்றன. இவை சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு சருமத்தில் விழும் சுருக்கங்களையும் வெடிப்புகளையும் தடுக்கிறது. மேலும் நெல்லிக்காயும் முகம் பொலிவு பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து சரும அழகை பாதுகாக்கிறது.