கே.முராரி என்று அழைக்கப்படும் பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. சினிமா கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்டார். யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் இசையில் வெற்றி பெற்றவை.
கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ், ஜந்தியாலா போன்ற சிறந்த இயக்குனர்களை வைத்து திரைப்படங்களை உருவாக்கினார். அவர் பத்துக்கும் குறைவான படங்களைத் தயாரித்திருந்தாலும், அவற்றில் பல இன்று கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன. “
தெலுங்கு சலனசித்ரா நிர்மதலா சரித்ரா” என்ற தலைப்பில் தெலுங்கு தயாரிப்பாளர்களைப் பற்றிய புத்தகத்தை வெளியிட்டதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். சீதாமாலக்ஷ்மி’, ‘கொரிண்டாக்கு’, ‘திரிசூலம்’, போன்ற படங்களை இவர் தனது பேனரில் தயாரித்தார். இவரது மறைவிற்கே திரை உலகினர் தங்களது எங்கள் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.