fbpx

பிக்பாஸில் வைல்டு கார்டு என்ட்ரியாக களமிறங்கும் விஜய் டிவி பிரபலம்..!! அவருக்கு வந்த அழைப்பிதழ் இதோ..!!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1ஆம் தேதி துவங்கிய நிலையில், இந்த முறை முதல் வாரத்தில் இருந்தே ஏவிக்ஷன் ப்ராசெஸ் துவங்கியது. முதல் வாரம், யாரும் எதிர்பாராத விதமாக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்த எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னுடைய உடல் நிலை இந்த போட்டிக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி அவரே வெளியேற்றினார்.

அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், கூடிய விரைவில் பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளரை களமிறக்க தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன், பிக்பாஸில் இருந்து தனக்கு கிப்ட் ஒன்று வந்துள்ளதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள் சிலர், ஒரு வேலை இவர் தான் வைல்ட் கார்டு எண்ட்ரியாக என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரம் வைல்ட் கார்டு போட்டியாளரை கூட யார் என்று சொல்லாமல் மிகவும் சீக்ரெட்டாக உள்ளே இறங்குவார் பிக்பாஸ். எனவே, இவர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.

அதே நேரம், பிக்பாஸ்ஸிடம் இருந்து ஏன் நாஞ்சில் விஜயனுக்கு கிஃப்ட் அனுப்பப்பட வேண்டும் என்கிற கேள்வி மனதை துளைத்துக்கொண்டிருந்தாலும், இதற்கான விடை கூடிய விரைவில் தெரிவிக்கப்படும். அது வரை கார்த்திருப்போம்.

Chella

Next Post

’நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா’..? மணி - ரவீனாவிடம் ஓபனாக கேட்ட விசித்ரா..!! அவர்கள் சொன்ன பதில்..!!

Wed Oct 11 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் வாரமே அனல் பறந்தது. கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். […]

You May Like