விருதுநகரில் திடீரென்று பெய்த சாரல் மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த முறை கோடை காலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்பார்த்த நிலையில், இந்த விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் பருவ மழை பெய்யாமல் இருந்து வந்ததால் வெப்பம் சற்றும் குறையவில்லை ஆகவே இதன் காரணமாக, பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது.
இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிதளவில் பாதிப்புக்குள்ளானது.
இத்தகைய சூழ்நிலையில் தான் சென்ற சில தினங்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். வெயிலின் தாக்கம் குறைந்தாலும் கூட பருவ மழை பெய்யவே இல்லை ஆனால் வெப்பம் மட்டும் அப்படியே காணப்பட்ட நிலையில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி மாலை 4 மணி அளவில் நகர்புறங்களில் மிதமான சாரல் மழை பெய்ததாக தெரிகிறது.
ஆகவே வெகு நாட்களாக நிழலில் வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த வெப்பநிலை காணப்பட்டது. அதுவரையில் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களும் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.