fbpx

உங்களை குரங்கு அம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா..? மத்திய அரசின் வழிகாட்டுதல் இதோ..!!

புதுடெல்லி, தற்போது உலகளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை எட்டு பேர் குரங்கு அம்மை நோயால் பாதிப்படைந்துள்ளனர். கேரளாவில் ஐந்து பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோயில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்,

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்த வேண்டும்.

இரண்டு கைகளையும் அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்யலாம்.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கும் போது, முக கவசம் மற்றும் கையுறைகளை அணிவது அவசியம்.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள், பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

மேலும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்த்து துவைக்க கூடாது.

குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Baskar

Next Post

பள்ளி மாணவர்களை டார்கெட் செய்த இளைஞர்.. எப்பொழுதும் மயக்கத்தில் வைத்திருக்கும் போதை மாத்திரைகள் விற்பனை..!

Wed Aug 3 , 2022
அருப்புக்கோட்டை, காவல் நிலைய காவல்துறையினர், சொக்கலிங்கபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை பிடிப்பதற்கு சென்றனர். அப்போது தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் மதுரையை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் தீபக் ராஜ் (25) என்பதும் தெரியவந்தது. மேலும் தற்போது அவர் அருப்புக்கோட்டை நெசவாளர் […]

You May Like