fbpx

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை எப்போது..? ரயில்வே நிலைக்குழு பரிந்துரை..!

ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கான கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திற்கு ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான ரயில்வேத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு, ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. அந்த பரிந்துரையின்படி, படுக்கை வசதி உள்ள ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு உடனடியாக கட்டண சலுகை வசதியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டண சலுகை மூலம் சாமானிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50% வரையிலான கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்தின்போது அச்சலுகை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது நிலைமை சீரான பின்னும் அதே நிலையே இன்னும் நீடித்து வருகிறது.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை எப்போது..? ரயில்வே நிலைக்குழு பரிந்துரை..!

இதையடுத்து, நாடெங்கும் உள்ள பல்வேறு ரயில் பயணிகள் நலச்சங்கங்களும் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் முன்னர் அமலில் இருந்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தியிருந்தன. எனினும், மூத்த குடிமக்களுக்கான சலுகை மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆவதால், மத்தியஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரயில்வே அமைச்சகத்துக்கு ரயில்வேத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Chella

Next Post

#Just now : மீண்டும் 17 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...! மத்திய அரசு தகவல்...!

Thu Aug 11 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,299 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 54 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,431 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like