fbpx

பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை…! மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பம்…? தமிழக அரசு தகவல்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.

முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18,19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

செஸ் உலகக்கோப்பை!… பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!… 20 ஆண்டுகளுக்கு பின் தமிழக வீரராக புதிய வரலாறு!

Tue Aug 22 , 2023
நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார். உலகக் கோப்பை செஸ் தொடரின் 10வது சீசன்அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 10 வீரர்கள், 7 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் […]

You May Like