fbpx

உலகிலேயே இங்கு தான் வேலை செய்யும் நேரம் குறைவு..!! எந்த நாட்டில் தெரியுமா..?

வாரம் 70 மணி நேரம் இந்திய இளைஞர்கள் உழைக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள நிலையில், உலகில் பல நாடுகளில் மிகக் குறைந்த அளவிலான பணி நேரங்களே நடைமுறையில் உள்ளன.

இந்தியா கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை போன்று மீண்டும் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதன்படி, பார்த்தால் வார விடுமுறை எடுக்காமல் தினசரி 10 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இது தொழிலாளர்களை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, தொழிலாளர் புரட்சியின் மூலம் கொண்டு வரப்பட்ட 8 மணி நேர வேலை நேர கொள்கைக்கு எதிரான முதலாளித்துவ மனநிலை என எதிர் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது தினமும் 8 மணி நேர வேலை, வாரம் ஒன்று அல்லது 2 நாட்கள் விடுமுறை என நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

உலக தொழிலாளர் அமைப்பு வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி, உலகிலேயே குறைவான வார வேலை நேரத்தை கொண்ட நாடாக தெற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள வனுவாடு என்ற நாடு விளங்குகிறது. அங்கு வாரத்திற்கு 24.7 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக உள்ளது. அதற்கடுத்த இடத்தில் அதே தெற்கு பசிபிக் நாடாக கிரிபாட்டி உள்ளது. அங்கு 27.3 மணி நேரம் பணிநேரமாக இருக்கிறது.

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஒரு நபர் வாரம் 28.6 மணி நேரம் வேலை செய்கிறார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஒருவர் சராசரியாக வாரம் 28.8 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 29.5 மணி நேரம் மட்டுமே வாராந்திர சராசரி பணி நேரமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வாரத்திற்கு 32.3 மணி நேரம் என்பது சராசரி வேலை நேரமாக உள்ளது. பிரிட்டனில் 35.9 மணி நேரம் என்பது பணி நேரமாக இருக்கிறது. அமெரிக்காவில் வாரத்திற்கு சராசரியாக 36.4 மணி நேரம் மட்டுமே பணிபுரிகிறார். சிங்கப்பூரில் 42.6 மணி நேரமாக உள்ளது. மலேசியாவில் 43.2 மணி நேரம் வாராந்திர சராசரி பணி நேரமாக இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளை எடுத்துக்கொண்டால் வங்கதேசத்தில் 46.9, பாகிஸ்தானில் 46.7, மாலத்தீவில் 46.2, சீனாவில் 46.1, மியான்மரில் 44.6, நேபாளத்தில் 40.3, ஆப்கானிஸ்தானில் 37.9, இலங்கையில் 36.2 என்பது வாராந்திர சராசரி பணிநேரமாக உள்ளது.

அதிக பணிநேரங்களை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம்தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு வாரத்திற்கு சராசரியாக 52.6 மணி நேரம் பணிபுரிகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா உள்ளது. அங்கு வாரத்திற்கு 50.8 மணி நேரம் சராசரி பணி நேரமாக இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பூடானில் வாராந்திர சராசரி பணி நேரம் 50.7 ஆக இருக்கிறது.

Chella

Next Post

’அவங்க கூட நீங்க எப்படி சேரலாம்’..? கொந்தளித்த பூர்ணிமா..!! உரிமை குரல் எழுப்பும் பிரதீப்..!!

Fri Oct 27 , 2023
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது டாஸ்குகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், போட்டியாளர்கள் இடையிலும் கடுமையாக போட்டி நிலவுகிறது. அந்தவகையில், தற்போது மாயா மற்றும் கூல் சுரேஷ் நல்ல சாப்பாடு வேணும் என பிக்பாஸ் இடம் சொல்லி விட்டு ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அவர்கள் வருவதற்கு அனுமதி தருகின்றனர். என் […]

You May Like