ராஜஸ்தானில் கலப்பட இருமல் சிரப் தொடர்பான நெருக்கடி மேலும் அதிகரித்தது. உள்ளூர் மருத்துவர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை சாப்பிட்ட சிகார் பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்தனர். இருவரும் ஜெய்ப்பூரின் ஜே.கே. லோன் மருத்துவமனையின் ஐ.சி.யூவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 16 ஆம் தேதி குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதாகவும், ஹதீதா ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு அவர்களுக்கு டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் அடங்கிய சிரப் […]

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று வால்பாறைக்கு அருகில் உள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் கருமலை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. […]

வீட்டு குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம், எரிவாயு சிலிண்டர் சீக்கிரம் தீர்ந்து போவதுதான். பண்டிகை காலமானாலும், அன்றாட சமையலாக இருந்தாலும் எதிர்பாராத இந்த அதிக எரிவாயு நுகர்வு பலருக்கும் தலைவலியாக இருக்கிறது. சிலிண்டர் குறைவாக நிரப்பப்பட்டிருக்கலாம் அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, சிலிண்டர் முன்கூட்டியே தீர்ந்து போவதற்கு நாமே அறியாமல் செய்யும் சில தவறுகளும், […]

பிளாஸ்டிக் பாக்ஸ்கள் மலிவான விலையில் எளிதாகக் கிடைக்கின்றன. அதனால்தான் பலர் உணவைச் சேமிக்க பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவை எல்லா வகையான உணவுகளையும் சேமித்து வைப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் இந்த உணவுகள் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயன உள்ளடக்கத்தை எளிதில் உறிஞ்சிவிடும். இவற்றை உண்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமில உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் சேமிக்கப்படும் போது, […]

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், ரயில் பாதையைக் கடந்து சென்றுகொண்டிருந்த 4 சிறுவர்கள் மீது அதிவேகமாக வந்த ஜோக்பானி – தானாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (26301) ரயில் மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காஸ்பா மற்றும் பூர்ணியா ரயில் நிலையங்களுக்கு இடையே, வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) பிரிவின் கீழ் நடந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்த சிறுவர்கள், அருகிலுள்ள துர்கா பூஜை […]

இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் பொதுவானதாக இருந்த ரூ.2000 நோட்டு, கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி ரூ.5,884 கோடி மதிப்புள்ள இந்த நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பின்னர் இந்த நோட்டுகளை மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.. குறைக்கப்பட்ட புழக்கம்: ரூ.2000 […]

வங்கி இயக்குநர்கள், பங்குதாரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் தங்களது உறவினர்களுக்குத் தாங்கள் பணிபுரியும் வங்கியில் அதிக அளவில் கடன் வழங்குவதாகவும், இந்தக் கடன்கள் பெரும்பாலும் வாராக்கடன்களாக மாறி மக்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அளவுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்படும் இத்தகைய கடன்களால் வங்கிகள் மீட்க முடியாமல் திணறுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தற்போது புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த […]

இரைப்பை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளுக்கு காரமான உணவுகளையே பலர் காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் உங்கள் வாழ்க்கை முறையின் சில பழக்கவழக்கங்கள் அடிக்கடி இரைப்பை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்… எனவே இந்த எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், உங்கள் வயிற்றில் இரைப்பை பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தலாம். எனவே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட நீங்கள் எந்தப் பழக்கங்களை விட்டுவிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். சாப்பிட்ட […]

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த செப்.27ஆம் தேதி விஜய் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல்துறையினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யலாம் என அஞ்சி, சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், […]