விருதுநகர், காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து […]

இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான UPI ID- ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் மொபைல் நம்பரை வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வசதியின் முக்கிய […]

சென்னையில் இன்றைய (ஜூன் 11, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற […]

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 2,299 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய வழிமுறைகள் கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள […]

நடைபயிற்சி என்பது எல்லா வகையிலும் ஆரோக்கியத்திற்கு நல்லது. யார் வேண்டுமானாலும் எளிதாக செய்யலாம். தினமும் காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் நடப்பது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரும். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும்? பலர் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளனர். இருப்பினும், இது அனைவருக்கும் சாத்தியமாகாமல் போகலாம். ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது கூட ஆரோக்கியத்திற்கு […]

ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார். கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை போல் தற்போது ஏசி பயன்பாடும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில், […]

பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று கூறி பெண் நீதிபதியை அவமதித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை வாய்மொழியாகத் தாக்கி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான டெலிபோன் சுப்பிரமணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வடிவேலுவின் எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் […]