நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில், பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ‘டும்ராவ்ன்’ (Dumraon) நகர மக்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்றும் மீண்டும் திரண்டு தேசியக் கொடியை ஏற்றி, பேரணிகள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுடன் இரண்டாவது நாளாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படும் இந்தப் பாரம்பரியத்தின் பின்னணியில் ஒரு வீரமிக்க வரலாற்றுத் தியாகம் ஒளிந்துள்ளது. 1942 […]

இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது டெஸ்ட் போட்டியை இலங்கை காலிமைதானத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தினமான (ஆகஸ்ட் 15) இன்று தொடங்குகிறது. இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 600 டெஸ்ட் போட்டிகளை எட்டிய 3-வது நாடு என்ற மகத்தான சாதனையை இந்தியா பெறுகிறது. அடிமைப்பட்ட இந்தியாவில் 1932-ல் தொடங்கி இன்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக உயர்ந்துள்ள இந்திய டெஸ்ட் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்வோம். […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக டெல்லி செங்கோட்டை விளங்குகிறது. பிரதமர் செங்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமர உரையிலிருந்து தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாகும். 1947-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையான தருணத்தை, தற்போதைய சுதந்திரக் கொண்டாட்டங்களோடு இணைக்கும் ஒரு பாலமாக இப்பாரம்பரியம் திகழ்கிறது. இந்த மரபு 1947-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் […]

ஆகஸ்ட் 15 என்றாலே குழந்தைகளுக்கு கொடியேற்றம், தேசிய கீதம், பள்ளி விழாக்கள், இனிப்புகள் என கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பதை குழந்தைகள் தெரிந்துகொள்வதும் முக்கியம். பெற்றோர்கள் இதை வரலாற்றுப் பாடம் போல இல்லாமல், அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்னக் கதையாகச் சொல்லிக் கொடுத்தால், நாட்டின் வரலாற்றை ஆர்வமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். “குட்டீஸ்… நாம இப்போ நம்ம நாட்டுல சுதந்திரமா இருக்கோம் […]

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் குடியரசு தினத்தைப் போன்றே சுதந்திர தினத்திலும் […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமான மரபாக திகழ்கிறது. பல தசாப்த கால போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய இந்த வரலாற்று நாளுக்குப் பின்னால் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. […]

தமிழகத்தில் பொதுமக்கள் நேரில் வராமல் ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களைப் பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’திட்டம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் இத்திட்டம் தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் […]

கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானதுதான். ஆனால், சின்ன விஷயங்களுக்குக்கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அது நீண்ட நேரம் நீடித்தால் உறவில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். இதுபோன்ற சூழலில் பிரச்சினைக்கான காரணத்தை மட்டும் தேடுவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் பேசும் விதத்தை மாற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கோபமாக இருக்கும் நேரத்தில் உடனடியாக பதில் சொல்லாமல், சிறிது நேரம் அமைதியாக இருப்பது முக்கியம். கோபத்தில் பேசப்படும் வார்த்தைகள் பின்னர் […]

இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]

கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்து, அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது மீனவர்கள் 9 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக […]