ஜவுளித் துறைக்கான பிஎல்ஐ திட்டம் புதிய விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 2025, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் பெருமளவிலான, உற்சாகமான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, ஜவுளித் துறைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2025, டிசம்பர் 31 வரை திறந்திருக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முன்மொழிவுகளை https://pli.texmin.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் வரும் அக்டோபர் 14ம் தேதி விண்டோஸ் 10 க்கான ஆதரவை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. நீங்கள் Windows சாதனத்தைப் பயன்படுத்தினால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் உங்கள் சாதனம் முடங்கும் வாய்ப்பு உங்களைவும் குழப்பத்தில் விடலாம். ஆனால், Microsoft வரும் அக்டோபர் 14 முதல் Windows 10 ஆதரவைக் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் பொருள் விண்டோஸ் 10 ஐ இயக்கும் சாதனங்கள் இனி முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்புகள், தொழில்நுட்ப […]

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த தொடர் விலை உயர்வு, நடுத்தர மக்களைத் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்க வைத்திருக்கும் நிலையில், எப்போதுதான் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் குறித்து பேசிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை குறைய ஒரே ஒரு வாய்ப்பு […]

திருச்சியில் இந்து கடவுளான ராமரின் உருவ படத்தை செருப்பால் அடித்து தீவைத்து எரித்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் , நாவல்பட்டு காவல் எல்லைக்குட்பட்ட அயன்புதூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி, “ஐந்தம் தமிழ் சங்கம்” சார்பில் ஆசிவக திருமால் வழிகாட்டுதல் விழா” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக யார் இணைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர். தகுதியான பயனாளிகள் நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம் என்ற காலக்கெடு உள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு : மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். இதில் உள்ள தகவல்களில் […]

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு (விஷ்ணுவுக்கு) உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும், குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமை, பெருமாளை வீட்டிற்கு அழைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வது பலரின் வழக்கம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில் சனி மகா பிரதோஷம் இணைவது கூடுதல் சிறப்பம்சமாகும். பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய வழிபாட்டுக் காலமாகும். எனவே, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் சனி மகா பிரதோஷம் இணைந்து வரும் […]

தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு தகவல் பலகைகளை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கியூ.ஆர். குறியீடு கொண்ட தகவல் பலகைகளை நிறுவவுள்ளது. இந்தப் பலகைகள், நெடுஞ்சாலைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் அவசரகால உதவி எண்களை வழங்கும்.இந்த கியூ.ஆர். குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், நெடுஞ்சாலையின் எண், நீளம், […]

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30 கிலோ தங்கம் முற்றிலும் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதில் 5 கிலோ கிராம் துவாரபாலகர் சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில்நாத் என்பவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஸ்ரீகோயிலில் தங்கத் தகடுகள் பதிக்க வேண்டும் என்று கடந்த 30 வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. இதுகுறித்து அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல […]

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் என்ற வரலாற்று சிறப்பைப் பெற்றது கூத்தனூர் சரஸ்வதி கோயில். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலும் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் தான் இந்த பிரசித்தி பெற்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமாக, வெள்ளைத் தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில், வெண்ணிற ஆடை அணிந்து தேவி அருள்பாலிக்கிறார். அன்னையின் வலது கீழ்க் கையில் […]

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]