பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, தனது மகள் ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ்: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மண்ணில் 4 பேருடன் தொடங்கப்பட்ட பாமக இன்று மாநிலம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது. இந்தக் […]

கந்த சஷ்டி விழா வந்துவிட்டாலே, தென் மாவட்டங்களில் உள்ள வீடுகளில் இருந்து மனதை மயக்கும் இனிய மணம் வீசும். அந்த மணத்தின் நாயகன், முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு வகையான ‘கந்தரப்பம்’ ஆகும். நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் கந்தசஷ்டி தினத்தின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த கந்தரப்பத்தை எளிமையான முறையில் தயாரிக்கும் செய்முறையை இப்போது பார்க்கலாம். பண்டைய காலங்களில், சுண்டல் மற்றும் தேங்காய்ப்பாலுக்கு அடுத்தபடியாக, முருகனுக்குப் பிரசாதமாக செய்யப்படும் […]

விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான […]

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே 28-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 930 கி.மீ. தூரத்திலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 890 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, மேற்கு, வட […]

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த […]

எதிர்காலத்திற்கான சேமிப்பு அவசியம். ஆனால் முதலீட்டில் குறைந்த ஆபத்தை வழங்கும் மற்றும் வருமானத்தை உத்தரவாதம் செய்யும் ஒரு வழி இருக்கிறதா என்று பலர் யோசிக்கிறார்கள். அத்தகைய விருப்பங்களில், தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்புத்தொகை சிறந்த வழி. இந்தத் திட்டத்தில், நீங்கள் வெறும் ரூ. 100 உடன் தொடங்கலாம். பெரிய அளவு பணம் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை செலுத்துவதன் மூலம் நீங்கள் தொடர்ந்து சேமிக்கலாம். இது சாதாரண […]

ஆந்திராவில் நேற்று அதிகாலை நடந்த கொடூரமான பேருந்து விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்… பேருந்தில் இருந்த வேறு சில பயணிகளைக் காணவில்லை.. எனவே அவர்களும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவசரி வழி கண்ணாடியை உடைத்து வெளியேறியதால் பலர் உயிர் தப்பினர்.. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அந்த பேருந்து சுமார் […]

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது.. அதன்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.. ஆனால் தனக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி […]

அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) ரூ. 32,000 கோடி பணத்தை கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இந்திய அதிகாரிகளால் ஒரு திட்டம் வரைவு செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இன்று செய்தி வெளியிட்டது.. இந்த நிலையில், எல்.ஐ.சி இன்று தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை கடுமையாக சாடியதுடன், அதில் இடம்பெற்ற செய்தி தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் விளக்கம் அளித்தது. பிரன்ஷு வர்மா […]

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ராஜவேலின் மகள் ராதிகா (35). இவர் விருத்தாசலம் அருகே வீராரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி ராதிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை […]