மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் தனித்தனியே […]

தமிழகத்தில் நிலவி வரும் தீவிர பருவநிலை மாற்றத்தின் காரணமாக, டெங்கு காய்ச்சலுடன் இணைந்து பல்வேறு வகையான சுவாசப்பாதை வைரஸ் தொற்றுகளும் ஒரே நேரத்தில் அதிவேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘இன்ப்ளுயன்ஸா ஏ’, அடினோ, ஆர்.எஸ்.வி (சுவாச ஒத்திசைவு வைரஸ்), கொரோனா மற்றும் சின்னம்மை போன்ற காற்றுவழி பரவும் நோய்களுடன், ‘ஸ்கிரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி காய்ச்சலின் தாக்கமும் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்த தொற்றுகளால் […]

ஜெம் வீரமணிக்கு மீதான பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் […]

சமீபத்தில் வெளியான ‘ஹூருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026’-ல், பாலிவுட்டின் ‘பாட்ஷா’ ஷாருக்கான் மீண்டும் இந்தியாவின் மிகப்பணக்கார நடிகராக முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டபோதிலும், இந்திய திரையுலகின் மிகப்பணக்கார நடிகர் என்ற தனது இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.10,000 கோடியாகக் குறைந்துள்ளது. […]

சர்வதேச விமானப் போக்குவரத்து தரவரிசை அமைப்பான ‘ஸ்கைட்ராக்ஸ்’ (Skytrax) வழங்கும் 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ உலகின் சிறந்த விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) கேதே பசிபிக் (Cathay Pacific) ஏ.என்.ஏ ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA All Nippon […]

தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தால், உலகளவில் அடுத்த ஆறு மாதங்களில் அதீத வெப்பம் காரணமாக சுமார் 4,51,000 பேர் கூடுதலாக உயிரிழக்கக்கூடும் என்று ‘கிளைமேட் இம்பேக்ட் லேப்’ (Climate Impact Lab) அமைப்பு தனது புதிய ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளது. இந்த உயிரிழப்புகள் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் நிகழலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஆண்டுகளில் ஏற்படும் இறப்புகளை விட கூடுதல் எண்ணிக்கையாகும். […]

பல மாதங்களாக ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளாவில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரேஷன் கார்டுகளை அரசு ஆய்வு செய்து வரும் நிலையில், லட்சக்கணக்கான கார்டுகளின் ரேஷன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. கேரளாவில் 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் பொருட்கள் பெறப்படாமல் இருக்கும் 5,62,494 முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் தற்போது கண்காணிப்பில் உள்ளன. இதில் 4,40,811 வெள்ளை நிற […]

காலை உணவில் சத்தான உணவுகளை சேர்ப்பது அன்றைய நாளை சீராக தொடங்க உதவும். குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது தினசரி உணவில் அதிக ஊட்டச்சத்துகளை சேர்க்க நினைப்பவர்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். காய்கறிகள், ராஜ்மா, கொண்டைக்கடலை, பன்னீர் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை ஒரே உணவில் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட், சுவையுடன் வயிறு நிறைந்த உணர்வையும் தரும். சைவ […]

கர்ப்ப காலம் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், தாயின் உடல் மற்றும் மனநலத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான காலகட்டம். இந்த காலத்தில் உணவு, தூக்கம், மருந்துகள், உடற்பயிற்சி என பல விஷயங்களில் கவனம் தேவைப்படுகிறது. குறிப்பாக சில பழக்கங்கள் கர்ப்பிணிக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது முக்கியம். அதில் முதன்மையானது புகைப்பிடித்தல். கர்ப்ப காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை […]

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக தனது மூன்றாண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று அஜித் அகர்கர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதியன்று பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் அக்டோபர் 4-ம் தேதிக்கு பின்னரே, புதிய தலைமைத் தேர்வாளர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கவுகாத்தியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த […]