fbpx

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சிலர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால், இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை …

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். இவர், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்திருந்தார். ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் …

தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இதே போல் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. தொடர் மழையால் பல சாலைகள் மற்றும் பாலங்கள் நீரில் மூழ்கியதால், சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,840 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 43 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,104 பேர் …

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் …

உணவு மற்றும் பொது விநியோகத் துறை,  கடந்த 6-ந்தேதி நடைபெற்ற  கூட்டத்தில், சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரூ.15-ஐ   உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

விலைகுறைப்பு  எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க,  உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் …

படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400-ம்‌, பட்டதாரிகளுக்கு, ரூ.600 …

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாகத் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும்  ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு …

தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை  முதல் வரும் 12-ம் தேதி …