பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் […]

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது […]

கணவர் இறந்துவிட்டாலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமையாக பாதுகாப்பான தங்குமிடத்தை அங்கீகரிக்கும் வகையில், மனைவியை அவரது திருமண வீட்டிலேயே வசிக்க அனுமதியளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகும், அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் கணவரின் வீட்டிலேயே வசித்து வந்தனர். இருப்பினும், அவரது கணவரின் தாயார் மற்றும் உடன்பிறந்தவர்கள் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தத் தொடங்கியதால், அவர் பாதுகாப்பு கோரி பாலக்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை […]

வீட்டிற்கு வாங்கி வரும் மல்லிகைப் பூக்களை ஃபிரிட்ஜ் இல்லாமல் எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மலர்களிலேயே மல்லிகையின் வாசம் தனித்துவமானது. அதேபோல், பெண்கள் பலருக்கும் பிடித்த பூ என்றால், அது மல்லிகை தான். ஏன், சில ஆண்களுக்கும் கூட மல்லிகைப்பூ என்றால் பிடிக்கும். வீட்டுக்கு மல்லிகைப் பூ வாங்கி வந்தால், அதை பலரும் ஃபிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால், அப்படி வைக்கும்போது, அதிகப்படியான கூலிங்கால், […]

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 6ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இதைத்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கிறோம். இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டியும் உயரும், கட்ட வேண்டிய தொகையும் உயரும். இந்தாண்டில் […]

வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், என்ன மாதிரியான பாதிப்புகள் வரக்கூடும் என்பதை டாக்டர் வித்யா விளக்கியுள்ளார். வயாகரா மாத்திரை என்பது தசைகளை தளர்த்தி, ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை பெரிதாக்கி, அதற்குள் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஆண் பாலியல் ரீதியாக உற்சாகமாக உணரும்போது இந்த விளைவு 4 மணி நேரம் வரை நீடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்தவொரு செயற்கையான மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால், அது பக்கவிளைவுகளை […]

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் இந்த கோயில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் முன் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து சென்றால், இடதுபுறத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு, கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசிக்கலாம். கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், […]

ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல்2025 இறுதி போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் களத்தில் அதிரடியாக தொடங்கினர். சால்ட் விரைவில் ஆட்டமிழந்தாலும், கோலி நிதானமாக […]

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 பிரதம சங்கங்களின் மூலம் நாள்தோறும் 8,500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆவினில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : ஆவின் பணியின் பெயர் : கால்நடை உதவி மருத்துவர் பணியிடம் […]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில், படத்தை எவ்வித தடையும் இல்லாமல் திரையிடவும், […]