தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) கைவிடக் கோரி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நேற்று முன்தினம் (நவம்பர் 16) சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி, சுவாமி சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உட்பட பல முக்கிய […]

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான இரண்டரை மாதத்தில், புதுமணப்பெண் தனக்கு வயிற்று வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, கணவர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தப் பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் […]

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் சக மூத்த மாணவர்களால் ஜாதி ரீதியிலும், மனரீதியிலும், உடல்ரீதியிலும் கடும் சித்திரவதைக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த முனியப்பனின் மகன் ஹரி பிரசாந்த் (13) என்ற அந்த சிறுவன், விடுதியில் தங்கிய நாள் முதல் இந்தப் பயங்கர கொடுமைகளை சந்தித்து வந்துள்ளான். விடுதியின் […]

குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக […]

வங்கக் கடலில் 22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு […]

சென்னை மேற்கு தாம்பரம், திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் ஜபீத் டைட்டஸ் (25). இவர் மாதவரத்தை சேர்ந்த ரெபேக்கா (27) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரெபேக்காவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ரெபேக்கா தனது பெற்றோரிடம் பேசிச் சம்மதம் வாங்கி வருவதாக கூறி, மாதவரத்தில் உள்ள பெற்றோர் […]

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி […]

தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 18) முதல் அரசு நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு வருவாய்த் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருவாய்த் துறை ஊழியர்கள் நாளைய தினம் முதல் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் உட்பட, அனைத்து அரசு நிர்வாகப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக […]

திமுக இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக 75 – அறிவுத்திருவிழா கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.. நேற்றைய நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.. அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் “ இளைஞர்களின் அறிவை வளர்க்க வேண்டும், ஆற்றலை பெருக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறோம்.. ஆனால் நாட்டில் சில தலைவர்கள், தங்களின் தொண்டர்கள் […]