பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிவதை தடை செய்தும், மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது  எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: * அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க […]

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றில் ஐஐடி பம்பாய், ஐஐடி கரக்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு, ஐஐஎம் பெங்களூர், ஐஐஎம் ரோஹ்தக், தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி ஐஐஎம், ரேபரேலி எய்ம்ஸ், என்ஐடிகள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், இந்திய புள்ளியியல் நிறுவனம் கொல்கத்தா, ஆர்ஜிஐபிடி பாசார் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. […]

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பெய்துள்ளது. இதே போன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விழுப்புரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தஞ்சை குமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை […]

ஜூலை மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதத்தில் மீண்டும் பள்ளி திறப்பு என்பது இரண்டாவது வாரம் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயில் குறைந்ததால் பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திறக்கப்படும் என தெரிவித்து, அன்றே திறந்து […]

31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை பாஜக மட்டும் அல்ல எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமான உரையாற்றினார். அந்த உரையில், “அதிமுக முடிந்துவிடும்” என மு.க. ஸ்டாலின் பேசுவது வெறும் பகல் கனவு எனக்கூறி அவர் கடுமையாக தாக்கினர். “நாட்டை காக்க […]

சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளன என தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை மாநகரில் தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. […]

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு […]

மின் கட்டண உயர்வு குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் வீட்டு மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இருக்காது. எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, […]

விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள 03.11.2017 வரை ஆறு மாத […]

தூத்துக்குடி மாவட்டத்தில், மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா (34) என்பவர் கடந்த 2014 ஆம் தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது, […]