தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 16-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை […]

அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மருந்துகள், சிகிச்சைகள் என அனைத்தும் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்புவோருக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படும். இது பொதுவார்டுகளைத் […]

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் பூர்வ ஆய்வு தேவை என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தரமான பதிலடி கொடுத்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். […]

பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்த கே.பாலுவை நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி. பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது சலசலப்பு எழுந்து […]

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகர் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்டது. முதல்வர் ஆசை விஜய்க்கும், […]

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த […]

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான […]

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், வேல்முருகன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். […]