திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் […]

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் இலக்குவன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதியான நாளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க மே 23ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். அப்போது, மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். ஆனால், இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் […]

சேலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 25 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி போன்றவற்றால், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் […]

தமிழ்நாட்டில் இந்தாண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தண்டு கல்வி விருது மற்றும் பரிசு வழங்கும் விழா நேற்று (மே 30) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், […]

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கருத்துக்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என்னுடைய தவறு என்றும் அவருக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். அதேபோல், பாமக-வில் முகுந்தனை நியமித்தபோது, தாயார் மீது அன்புமணி பாட்டில் வீசித் தாக்கியதாகவும், பாஜகவுடனான கூட்டணிக்காக […]

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக […]

சேலம் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் ஜவுளி வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட […]

நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிகத் தீவிரமாக உள்ளது. மே 29 அன்று காலை மேற்கு வங்கம் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வங்கம் – வங்கதேசம் கடற்கரை […]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் […]

தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்தநிலையில், இயற்கைப் […]