கோவை பூ மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு, சட்டக் கல்லூரி மாணவிக்கும் நடந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஜனனி (வயது 20), செப்.21-ஆம் தேதி கோவை பூ மார்க்கெட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் உடை குறித்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் விமர்சித்துள்ளார். அப்போது, அந்தப் பெண் இது அரைகுறை ஆடையா? ஒருத்தர் அணியக்கூடிய உடை அவர்களின் உரிமை […]

தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் இயல்பான நகைச்சுவையால் தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 46 வயதிலேயே உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இந்த மயக்கம் […]

முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க எதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ. 36 […]

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே […]

ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: சேலம் மாவட்டத்தில், ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை […]

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்டுமென தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் – ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் […]

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு […]

தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையக்கூடும். இன்று, மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் கட்சி மீது விசுவாசம் இல்லை, திமுகவை தான் தாங்கி பிடிக்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார்.. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ காங்கிரஸை பற்றி இபிஎஸ் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் காங்கிரஸ் மீது விசுவாசமாக இருக்கிறேனா இல்லையா என்பது […]