சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் வசிக்கும் மனோகரன் – ராணி தம்பதியின் கடைசி மகன் சரவணன் (31). இளம் வயதிலேயே வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை சந்தித்த சரவணன், கடந்த மே மாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனது பாலினத்தை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு வனிதா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு வடக்கு ரயில்வே லைன் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழத் தொடங்கினார். சமீபத்தில், […]

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர அனுமதி வழங்கி தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர கே.சி பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி, வழக்கறிஞர் ராம் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. அதில் “ அதிமுக […]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.. சிதம்பரத்தில் இருந்து வேளங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இரு சக்கரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.. மேலும் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.. அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற சங்கர் என்பவர், துப்புரவு பணியில் […]

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பேராசிரியை நிகிதா சென்றுள்ளார். அப்போது, தனது நகைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், அந்த கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை காவலர்கள் மிகக் கொடூரமாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கை […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ..75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

தமிழ்நாடு பெண்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டம் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் […]

இளைஞர்களும், பெண்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்குடன், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு தொழில் பயிற்சி மற்றும் ஊக்கத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்போது சென்னையில் நடத்தப்படவுள்ள பயிற்சி நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் உருவாக்கியுள்ளது. சென்னையில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 3 நாள் பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி […]

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தற்போது தனது 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரவி அரசின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்படத்தை விட அதிக பேசப்பட்டு வந்தது விஷாலின் திருமணம் தான். நீண்ட நாட்களாகவே, “விஷால் எப்போது திருமணம் செய்யப் போகிறார்?” என்ற கேள்வி திரை உலகிலும், […]