லஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன், மனசாட்சி உள்ள உண்மையான மக்களாட்சியை எப்போதும் சமரசமின்றி தொடர்வோம் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்” என தனது வழக்கமான பாணியில் கூறிய அவர், கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் யாருக்கும் வழங்கிடாத பெருவாரியான வாக்குகளையும் பேரன்பையும் வழங்கி, […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கும்பகோணம் அருகே ‘தாய்மாமன் தங்க மோதிரத்தை’ உடனடியாக தர வேண்டும் எனக் கூறி, கிராம சுகாதாரச் செவிலியரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை கும்பகோணம் அடுத்த முழையூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அலமேலு (35). கிராம சுகாதாரச் செவிலியராக பணியாற்றி வரும் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் மதன் – வனிதா தம்பதிக்கு கடந்த 16-ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. அரசு நடைமுறைப்படி, குழந்தை பிறந்த தேதியின் […]
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை மாலை கைது செய்து சிறைபிடித்துள்ளனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டோக்கன் அலுவலகத்தில் முறையான அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, 400-க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, […]
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய எம்.எல்.ஏ.-க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய […]
சூரியக் குடும்பத்தின் அழகிய கோளான சனிக்கிரகம், பூமிக்கு மிக அருகாமையில் வந்து வழக்கத்தை விடவும் அதிகப் பிரகாசத்துடனும் பெரிய அளவிலும் காட்சியளிக்கும் அரிய வானியல் நிகழ்வு இன்று (அக். 4) நிகழவுள்ளது. சூரியன் மற்றும் சனிக்கிரகத்திற்கு நேர் நடுவே பூமி ஒரே நேர்க்கோட்டில் கடந்து வரும்போது உருவாகும் இந்த நிகழ்வை பொதுமக்கள் விடிய விடிய பார்த்து ரசிக்கலாம். வானியலில் ‘எதிர்நிலை’ (Opposition) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் போது, சூரியன் […]
இந்து தர்ம சாஸ்திரத்தில் அமாவாசை திதி என்பது பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பூர்வஜென்ம கர்ம வினைகளை கரைப்பதற்குமான மகா சக்தி வாய்ந்த புண்ணிய நாளாக போற்றப்படுகிறது. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களை நினைத்து முறைப்படி எள்ளும் தண்ணீரும் இறைத்து, தூய சைவ உணவுகளை படையலிட்டு வழிபடுவதன் மூலம் பித்ருக்களின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும். இதன் மூலம் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வந்து வாழ்க்கையை முடக்கும் கொடிய கர்ம வினைகளின் தாக்கமும் […]
ஒரு குடும்பத்தின் ஆணிவேராகவும், தலைமுறை தலைமுறையாக வம்சத்தை காக்கும் கவசமாகவும் விளங்குவது குலதெய்வ வழிபாடு மட்டுமே. குடும்பத்தில் எவ்வித தோஷங்களும் இன்னல்களும் அண்டாமல் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தழைத்தோங்க குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியது அவசியமாகும். ஒருவரின் ஜாதக அமைப்பில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் வீட்டை ஆய்வு செய்வதன் மூலம் அவரது குலதெய்வம் எது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்; ஜாதக குறிப்பு இல்லாதவர்கள் சோதிடப் பிரசன்ன […]
மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாகவும் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதியும், பதிவான வாக்குகள் எண்ணும் பணி அக்டோபர் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தல் அமைதியான சூழலில் வன்முறைகளின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் […]
தென்மேற்கு பருவமழை படிப்படியாக விடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘எல் நினோ’ வானிலை மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதீத கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை […]
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீரை பற்றி நாளை ஆய்வு செய்ய உள்ளோம். அச்சின் கரையோரத்தில் புதிதாக எந்த ஒரு கட்டுமான பணிகளும் கட்டப்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துரைகளை பராமரிப்பு செய்தால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு […]

