சென்னை அருகே வீட்டின் உரிமையாளரின் தொல்லையால் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனது 40 வயதான மனைவி உமா, 19 வயதான ஸ்ரீநிதி என்ற மகள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீநிதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று […]

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், இபிஎஸ் வாழ்க என கோஷமிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், 30-ஆம் தேதி […]

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் கலைபுலி எஸ்.தாணு சமீபத்தில் இவரது தயாரிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பலருக்கு உதவிகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில், சென்னை காவேரி மருத்துவமனையில் 33 வயதுடைய பெண் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். […]

சென்னையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தேர்வுக்கு பயந்து மாணவனே கடத்தல் நாடகமாடியிருப்பது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த அரவிந்த் ஷர்மா என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 12 வயது மகன் மிதிலேஷ் குமார், கீழ்பாக்கம் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவரை வழக்கம் போல ஆட்டோவில் அழைத்து வரும் ஓட்டுநர், பள்ளி […]

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருக்கின்றது. சின்னசாமி பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். […]

விழுப்புரம் பகுதியில் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சசிகலா என்ற தலைமை ஆசிரியர் சிறப்பாக தனது பணியை செய்து வருகின்ற நிலையில், மாணவிகள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என இவர் செய்த செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் இருந்த நிலையில் காலாண்டு தேர்வில் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,2 08 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து 77 லட்சம் மோசடி செய்துள்ளதாக அந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் போலீசில் புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் நரியம்பட்டு ஊராட்சி மன்றத்தின் தலைவராக பாரதி என்ற பெண் இருக்கின்றார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் […]

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 12ஆம் வகுப்பு மாணவி, காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. அந்த பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வரும் கோபிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோபியும், 12ஆம் வகுப்பு […]

வரும் 31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]