ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீடுகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 % முதல் 52% வரை உயர்த்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புக்கு மேல் மின்இணைப்பு இருந்தால், ஒரே இணைப்புக்கு […]

தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர […]

பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் ‌‌. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில்; பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில்‌ […]

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் […]

இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சொந்த ஊர்களை நோக்கிக் சென்றனர். பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதால் போக்குவரத்து வசதியில் பாதிப்புகள் இருக்கும், இதனால் பயணத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல தரப்பிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அண்டை மாநிலமான […]

கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரியில் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார்தீப்பிடித்த சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் வீடு உள்ள பாலூர் […]

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. கோவை கோட்டை மேட்டு பகுதியில் கடந்த 23ம் தேதி அதிகாலை கார் ஒன்று சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சசமையல் எரிவாயு வெடித்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் வெடி பொருட்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.இதையடுத்து […]

கோவை வெடிவிபத்தில் இதுவரை 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரத்தில் உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார்.இவரது வீட்டை சோதனை நடத்தியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதே போல உயிரிழநு்த ஜமேசா முபின் வீட்டில் […]

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவாரமாக தீபாவளியை நேற்று கொண்டாடினர். கொரோனா காலக்கட்டம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகள் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து மிகச் சிறப்பான பண்டிகையாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகை ஒட்டி பட்டாசு வெடித்ததால் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு […]

உலகம் முழுவதும் இன்று தென்படும் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாட்டில் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. ரஷ்யா, கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். இந்தியாவில் மாலை 4.30 மணியளவில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சி […]