நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஐடி துறையினர் போல நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் ஒரு நிம்மதியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றின்படி, காலில் உள்ள ஒரு சிறிய தசைக்கு நாம் கொடுக்கும் பயிற்சி, ரத்தச் சர்க்கரை அளவை குறைப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மனிதனின் கெண்டைக்கால் பகுதியில் உள்ள ‘சோலியஸ்’ (Soleus) என்ற தசையைத் தூண்டுவதன் […]

ஆரோக்கியம் குறித்த தேடல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைகளை விட, அனுபவம் என்ற பெயரில் பகிரப்படும் சமூக வலைதளக் குறிப்புகளே பலரையும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், “காலையில் ஒரு குவளை வெந்நீர் குடித்தால் நூற்றுக்கணக்கான நோய்கள் ஓடிவிடும்” என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், வெந்நீர் குடிப்பதன் மூலம் உடல் பருமனை அடியோடு குறைத்துவிடலாம் என்பதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை என்று […]

இரவு உறங்க செல்வதற்கு முன் அலாரம் வைத்துவிட்டு, செல்போனை தலையணைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் ஒரு ‘சைலண்ட்’ கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கைகளுக்கு எட்டும் தூரத்தில் போன் இருந்தால் தான் நிம்மதி என்று நினைக்கும் பலருக்கும், அந்தப் பழக்கம் ஒரு மெதுவான நஞ்சாக மாறி வருகிறது என்பதை மருத்துவ உலகம் ஆதாரங்களுடன் எச்சரிக்கிறது. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமக்குத் தெரியாமலேயே நமது உடல்நலனைச் சிதைக்கும் பல்வேறு […]

இந்தியா தற்போது ‘உலகின் நீரிழிவு தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. உலகின் நீரிழிவு நோயாளிகளில் 17 சதவீதம் பேர் நம் நாட்டில் உள்ளனர். நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட உடல்நலப் பிரச்சினை. இதன் முக்கிய அறிகுறி இரத்த குளுக்கோஸ் அல்லது சர்க்கரை அளவு அதிகரிப்பதாகும். ஆரம்ப நிலையிலேயே இது கண்டறியப்படாவிட்டால், அது இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு மற்றும் பார்வை இழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பலருக்கு தங்களுக்கு […]

கருவளம் தொடர்பான சிக்கல்கள் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற அறியாமை நிறைந்த காலம் மெல்ல மறைந்து வருகிறது. இன்றைய நவீன உலகில், ஆண்களும் சம அளவில் இத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை மருத்துவ உலகம் உரக்கச் சொல்கிறது. குறிப்பாக, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைபாடு என்பது இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களிடையே பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. இதற்குத் தீர்வு காண விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடும் முன், நம் […]

இந்தியாவில் ஒரு காலத்தில் திருமணம் என்பது குடும்ப பெரியவர்களால், சாதி மற்றும் ஜாதக பொருத்தங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் (2016-2025) இந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளதை ‘ஜீவன்சாதி’ (Jeevansathi) தளம் நடத்திய விரிவான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைய இளைஞர்கள் திருமணத்தை ஒரு கடமையாகப் பார்க்காமல், தங்களுக்குப் பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாழ்வியல் முடிவாகவே கருதுகின்றனர். இதனால், திருமணத்திற்கான சராசரி வயது 27-லிருந்து […]

இன்றைய நவீன உலகில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை வைப்பது, பிபிஏ (BPA) மற்றும் தாலேட்ஸ் (Phthalates) போன்ற நச்சு ரசாயனங்களை உணவில் கலந்து, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும் என்பது பரவலான விழிப்புணர்வாக மாறியுள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான மக்கள் மீண்டும் பழையபடி சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரங்களுக்கு மாறி வருகின்றனர். இவை இரண்டுமே பாதுகாப்பானவை என்றாலும், பயன்பாடு மற்றும் ஆரோக்கியம் என்று வரும்போது இரண்டிற்கும் இடையே […]

அசைவ உணவுகளில் மிக குறைவான பக்கவிளைவுகளை கொண்டதும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் என ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாகவும் விளங்குவது மீன். உடல் ஆரோக்கியத்திற்குத் தொடர்ந்து மீன் சாப்பிடுவது நல்லது என்றாலும், சில வகை மீன்களில் உள்ள பாதரச (Mercury) அளவும், கடல் மாசுபாடுகளும் சில குறிப்பிட்ட நபர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன. யாரெல்லாம் மீன் சாப்பிடும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் தகவல்களை இந்தப் […]

குழந்தைகள் உறங்கும்போது மூக்கு வழியாக மூச்சுவிடுவதுதான் இயற்கை. ஆனால், சில குழந்தைகள் வாய்வழியாக மூச்சுவிடுவதை பெற்றோர் கவனித்திருப்பார்கள். “ஏதோ குழந்தை வாய் திறந்து தூங்குகிறது” என்று இதனை எளிதாக கடந்துவிடக் கூடாது என எச்சரிக்கிறார் சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சுபாஷ். இது ஒரு பழக்கமல்ல, உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பாதிப்பின் அறிகுறி என அவர் சுட்டிக்காட்டுகிறார். வாய்வழி சுவாசத்தால் ஏற்படும் சிக்கல்கள் : வாய் வழியாக […]

காபி என்பது பலருக்கும் புத்துணர்ச்சி தரும் பானமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் சில குறிப்பிட்ட நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர் என்றால், அதே காபி உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். காபியில் உள்ள ‘காஃபின்’ (Caffeine) சில மருந்துகளுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து, மருந்தின் வீரியத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் தேவையற்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் மருந்துகள் : இரத்த அழுத்தத்தைக் […]