உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]

ஆரோக்கியமாக வாழ விரும்பும் நாம், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்துப் பரப்பப்படும் பல கட்டுக்கதைகளில் சிக்கிவிடுகிறோம். இந்தத் தவறான நம்பிக்கைகள், பல சமயங்களில் நமது ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கே ஆபத்தாக மாறிவிடுகின்றன. உடல் எடைக் குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை, மக்களிடையே நிலவும் 5 முக்கிய கட்டுக்கதைகளையும் அதற்கான உண்மைகளையும் இங்கே பார்க்கலாம். கட்டுக்கதை 1 : கொழுப்புச் சத்துதான் உங்களை எடை அதிகரிக்க செய்கிறது. உண்மை : […]

தற்போது நிறுவனங்களில் அதிகரித்து வரும் வேலை கலாசாரம், ஊழியர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க உடல்நல கவலையை ஏற்படுத்துவதாக ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மருத்துவம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் பரவலாக இருக்கும் இரவு நேர ஷிப்டுகளில் தொடர்ந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, 14 ஆண்டுகளில் சுமார் 2,20,000 […]

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் முறைகளில், பெண்களுக்குரிய கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பலர் அவற்றை தவிர்க்கின்றனர். எனவே, ஆண்களுக்கான முக்கிய கருத்தடை முறைகளான வாஸெக்டமி மற்றும் ஆணுறை பயன்பாடு முக்கியமானதாகிறது. இதில், ஆணுறை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிமையான முறையாக கருதப்படுகிறது. இது கர்ப்பத்தை தடுப்பதுடன் மட்டுமல்லாமல், எய்ட்ஸ், சிபிலிஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆணுறை வகைகள் […]

இளம் தலைமுறையினர் முதல் நடுத்தர வயதினர் வரை இன்று பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை நீண்டகால முடி உதிர்வு ஆகும். இந்தப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், பிரபல ஆரோக்கிய மற்றும் நலவாழ்வு நிபுணர் டிம்பிள் ஜங்கடா, முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்களையும், அதைத் தடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய சிகிச்சை முறைகளையும் விளக்கியுள்ளார். இரும்புச்சத்துக் குறைவு : முடி வேர்கள் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுவதால் தான் அதிக அளவில் […]

மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், இதற்காக பெரும்பாலான நேரங்களில் இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று குழந்தை நல மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவான அறிவுரையை வழங்கியுள்ளனர். குழந்தைகள் நல மருத்துவர்கள் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள தகவலின்படி, பெரும்பாலான இருமல் மருந்துகளில் பலதரப்பட்ட ரசாயன மூலக்கூறுகள் கலந்தே தயாரிக்கப்படுகின்றன. இவற்றால் இருமலுக்கு முழுமையான தீர்வு கிடைக்குமா என்பது […]