நெற்றியைத் துளையிடுவது போன்ற தாங்க முடியாத வலியுடன் இருண்ட அறையில் முடங்க வைக்கும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால், உலகளவில் சுமார் ஏழு பேரில் ஒருவர் (100 கோடிக்கும் அதிகமானோர்) பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் மைக்ரேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. நரம்பியல் மற்றும் மரபியல் ரீதியாக மூளையில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்புற காரணிகளால் தூண்டப்படும்போது, குறிப்பிட்ட […]

முதுமை என்பது தவிர்க்க முடியாத இயற்கை நியதி என்றாலும், தினசரி வாழ்க்கை முறையில் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 60 வயதைக் கடந்தாலும் சருமத்தில் முதுமை தெரியாமல் இளமை பொலிவுடன் திகழ முடியும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு, எளிய உடற்பயிற்சி மற்றும் இயற்கையான சருமப் பராமரிப்பு ஆகியவை ஒருங்கே இணையும்போது முகத்தில் தோன்றும் சுருக்கங்களை விரட்டி, புதுப்பொலிவையும் தன்னம்பிக்கையையும் பெறலாம். முதுமையை விரட்டும் பப்பாளி – சந்தனம் ஃபேஸ் […]

வீட்டில் செய்யும் குழம்புக்கும், உணவகத்தில் பரிமாறப்படும் குழம்புக்கும் சுவையில் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த சுவைக்கு எந்த ஒரு ரகசியப் பொருளும் காரணம் இல்லை. வெங்காயத்தை சரியாக வதக்குவது முதல் மசாலாவை பொறுமையாக சமைப்பது, தண்ணீரின் அளவை சரியாகக் கையாள்வது வரை ஒவ்வொரு சமையல் முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சிறிய நுட்பங்களை சரியாகப் பின்பற்றினால், வீட்டிலேயே உணவக பாணியில் மணமும் சுவையும் நிறைந்த […]

குழந்தை பிறந்த பிறகு, பால் கொடுப்பது முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக பால் குடித்த பிறகு குழந்தை அழுவது, உடலை நெளிப்பது அல்லது அமைதியின்றி இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பால் குடிக்கும் போது குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும் காற்றும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், பால் கொடுத்த பிறகு குழந்தையை ஏப்பம் விடச் […]

உலக புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டைசன் (Dyson), வாயின் உட்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் கேமரா, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மவுத்வாஷ் தெளிப்பான் வசதிகளுடன் கூடிய ‘கேமராஜெட்’ (CameraJet) என்ற அதிநவீன எலக்ட்ரிக் டூத்பிரஷை அறிமுகம் செய்துள்ளது. பாரிஸ் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனத்திற்கு அமெரிக்க மதிப்பில் 499.99 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய் என விலை […]

முறையாக பல் துலக்காதது மற்றும் அதிகளவு இனிப்பு பண்டங்களை உண்பது போன்றவற்றால் பற்களில் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பற்களை சிறுகச் சிறுக அரித்து கருப்பு புள்ளியாகத் தொடங்கி, நாளடைவில் பெரிய குழியாக மாறி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. குளிர்ந்த உணவுகளை சாப்பிடும்போது பல்லில் கூச்சம் ஏற்படுவது, பற்களின் உணர்திறன் அதிகரிப்பது, இனிப்பு சாப்பிடும்போது தாங்க முடியாத வலி உண்டாவது ஆகியவை பல் சொத்தையின் முக்கிய அறிகுறிகளாகும். […]

உலகளவில் நிகழும் அதிகபட்ச உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது இதய நோய்களே ஆகும். உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களே இதற்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலர் பாதிப்புகளில் சுமார் 80 சதவீதத்தை எளிதாக தடுக்க முடியும் என்று உலக இதய கூட்டமைப்பு (WHF) சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் […]

நவீன உணவு பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு முறைகளால் மனித உடலில் நாள்தோறும் பல்வேறு நச்சுக்கள் சேர்கின்றன. இந்த நச்சுக்களை வெளியேற்றி, உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை நமக்கு எளிய காய்கறிகள், கீரைகள் மற்றும் மூலிகைகளை வரப்பிரசாதமாக வழங்கியுள்ளது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகள் ஒவ்வொன்றும் உடலின் குறிப்பிட்ட உறுப்புகளை இயற்கையாகவே சுத்திகரிக்கும் அபார ஆற்றல் கொண்டவை என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது செரிமான மண்டலம் […]

ஒரு காலத்தில் இந்திய குடும்பங்களில் அதிகம் அறியப்படாத ‘அவகேடோ’ பழம், தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள் மற்றும் மக்களின் உணவு மேஜைகளில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பழமாகக் கருதப்பட்ட இது, தற்போது இந்தியாவின் ஆரோக்கியமான உணவு முறையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளதுடன், இந்திய விவசாயிகளாலும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு […]

Dragon Fruit Benefits | தென் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட டிராகன் பழம் (Dragon Fruit), 19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் மூலம் வியட்நாமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. மெக்சிகோ பூர்வகுடி மக்களால் ‘பிடாயா’ (Pitaya) என அழைக்கப்பட்ட இப்பழம், தனித்துவமான வடிவமும் சுவையும் கொண்டு தற்போது தமிழகத்திலும் வெற்றிகரமாக விளைவிக்கப்படுகிறது. கள்ளி வகையைச் (Cactus) சேர்ந்த […]