அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரு கடுமையான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் மீது கடுமையான அபராதங்களை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை அவர் ஆதரித்துள்ளார். உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதே இந்த கடுமையான நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும். டிரம்ப்பின் நேரடி எச்சரிக்கை : இதுதொடர்பாக […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் […]

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் தலைநகர் டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.. சில இடங்களில் தீ வைப்பு சம்பவஙள் நடந்ததையும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வங்கதேசத்தில் புதிய வன்முறைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளுக்கு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வங்கதேச […]

ஆன்லைன் வங்கி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை (.com அல்லது .co.in) மாற்றி, இனி .bank.in என்ற புதிய டொமைன் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று […]

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் […]

மிசோரமில் தண்ணீரில் பரவிய இரைப்பை குடல் அழற்சி வெடிப்பு நோயால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள காகிச்சுவா கிராமத்தில், நீரினால் பரவும் ஒரு பொதுவான நோயான இரைப்பை குடல் அழற்சியின் கடுமையான வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 8 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 130 குடும்பங்கள் வசிக்கும் மற்றும் மியான்மரின் எல்லையை ஒட்டியுள்ள இந்த தொலைதூர குக்கிராமத்தில், […]

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சந்தானம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவரது மனைவி மனிஷா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்காததால், மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் […]

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலை மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக, 34 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவரை கைது செய்து போலீசார் நடத்திய […]

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்காம் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம், பட்காம் மாவட்டத்தின் பலார் பகுதியை நோக்கி நெடுஞ்சாலையில் கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. அக்கார் மீது, எதிரே வந்த லாரி ஒன்று திடீரென […]

உலகமே கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அதுபோன்ற ஒரு புதிய பெருந்தொற்றை உருவாக்கும் ஆபத்து நிறைந்த ஒருவகை வைரஸ் பாதிப்பு தற்போது மனிதர்களிடையேயும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அடுத்து ஒரு உலகளாவிய பெருந்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டு, கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர பல ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்காவில் ஒருவருக்கு H5N5 பறவை காய்ச்சல் தொற்று […]