பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் வரம்பில் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள பிரம்மோஸ் விண்வெளிப் பிரிவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு, ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகள் பெற்ற வெற்றியைப் பாராட்டினார், ஆனால் அது வெறும் […]

இந்தியாவில் இனி ரயில் பயணங்கள் கொஞ்சம் வண்ணமயமாகவும், மிகவும் வசதியாகவும் மாறவுள்ளன. ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ராஜஸ்தானின் வளமான ஜவுளி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் பாரம்பரிய சங்கனேரி பிரிண்ட் அலங்கரிக்கப்பட்ட போர்வைகளை வழங்கும் ஒரு புதிய முயற்சியை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த திட்டம் ஜெய்ப்பூரின் கதிபுரா ரயில் நிலையத்தில் ஒரு சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டது, மேலும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் சோதிக்கப்படும். தூய்மை குறித்து […]

ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தை மருத்துவரான டாக்டர் சிவரஞ்சனி, சர்க்கரை நிறைந்த பானங்களை வாய்வழி நீரேற்றக் கரைசல்கள் (ORS) என்று தவறாக சந்தைப்படுத்துவதற்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வருகிறார் . உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த தரநிலைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்காவிட்டால், எந்தவொரு உணவு பிராண்டும் அதன் தயாரிப்புகளில் ‘ORS’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் […]

டெல்லியின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) கேட்டரிங் ஊழியர்கள் என இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. IRCTC ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, அவர்கள் […]

மகாராஷ்டிர பாஜக எம்.எல்.ஏ கோபிசந்த் படல்கர், இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லக்கூடாது என்ற தனது அறிவுரையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவின் பீட் நகரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ கல்லூரி செல்லும் இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஏனெனில், ஒரு சதி நடந்து வருகிறது, யாரை நம்புவது என்று அவர்களுக்குத் தெரியாது..” என்று அவர் […]

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத் தலைமைப் பேருந்து நிலையத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிச் சிறுமி தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதுமே, அந்த ஆட்டோவில் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர் ஒருவரும் ஏறிக்கொண்டார். […]

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த ஒரு சைபர் மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஒரு வயதான தம்பதியினர் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்பவர்களால் “டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு” ரூ.1.5 கோடி இழந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 3 ஆம் தேதி, ஓய்வுபெற்ற ஹரியானா சாலைவழி தணிக்கையாளர் சஷிபாலா சச்தேவா மற்றும் அவரது கணவருக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அதிகாரிகள் […]

தெலங்கானா மாநிலம் மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலைத் தொடர தடையாக இருந்த கணவனை, மனைவியே ஒரு மந்திரவாதியை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாகர் கர்னூல், ஸ்ரீபுரத்தைச் சேர்ந்தவர் ராமுலு (35). பிளம்பராக வேலை செய்து வந்த இவருக்கும், இவரது மனைவி மானசா (35) என்பவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த […]