நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு […]

உலகின் பிற நாடுகளுடனும் இந்தியா ஒற்றுமையை அதிகரிக்க விரும்புவதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குஜராத்தின் வதோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (மே 30, 2025) வெளிநாட்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சர்வதேச ஒத்துழைப்பு, தன்னிறைவு இந்தியா மற்றும் வசுதைவ குடும்பகரம் ஆகியவற்றின் […]

ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 18 வயதுக்குட்பட்ட அந்த சிறுமி வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு மர்ம நபர், தன்னை நடன பயிற்சியாளர் என சிறுமியிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமிக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். அந்த சிறுமியும் அதனை நம்பி, நடனம் கற்றுக் கொள்ளும் ஆசையில், அந்த நபரின் காரில் […]

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். இந்த இளைஞர், கடந்த 2021ஆம் ஆண்டு நொய்டாவை சேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு வருமாறு அந்தப் பெண்ணை அவர் அழைத்துள்ளார். பின்னர், அங்கு ஒதுக்குப்புறமாக அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, அவருக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து […]

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளையரசன் என்பவர், ஃபிங்கர் என்ற கடன் செயலி மூலம் ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளார். மேலும், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து உரிய நேரத்திலும் இளையரசன் திருப்பி செலுத்தியிருக்கிறார். ஆனால், பணம் செலுத்திய பிறகும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் இளையரசனை தொடர்பு கொண்டு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை இளையரசன் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, இளையரசனின் புகைப்படத்தை, அந்த […]

இந்தி பிக்பாஸ் ஷோவை நடத்த சல்மான் கானுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் பாலிவுட் வட்டாரத்தில் பற்றி எரிந்து வருகிறது. வெள்ளித்திரை போலவே சின்னத்திரையும் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. எப்போதும் புதுமையாக இருப்பதுதான் சின்னத்திரையின் சவாலே. சில நேரங்களில் சினிமாவை விட சின்னத்திரையில் தான் சுவாரஸ்யம் அதிகம் இருக்கும். அந்த வகையில், இந்திய தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். […]

கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் முன்னேறி வருவதால், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான இடியுடன் கூடிய […]

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்பின், கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை […]