93 வயது முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு தாலி வாங்க நகைக் கடைக்கு சென்ற போது, கடைக்காரரின் தாராள மனப்பான்மையால் அதற்கு வெறும் ரூ.20 செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் அவற்றில் சில வீடியோக்கள் தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகரில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
புதிய புதிய FASTag விதிகளின்படி ரூ.3000 ரீசார்ஜ் செய்து வருடம் முழுவதும் 200 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துகின்றனர். புதிய கொள்கையின் கீழ், வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி ஆண்டு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும். இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, எரிபொருளையும் […]
ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பேகம்பேட்டை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலைய வளாகம் முழுவதும் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான நிலைய ஊழியர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தெலுங்கானா […]
ADGP ஜெயராம் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. […]
An Air India flight from Delhi to Bali, Indonesia, returned to Delhi due to a volcanic eruption.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியதிலிருந்து இது 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். 2011 ஆம் ஆண்டு கடைசியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை […]
காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]
மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, மூன்றாவது மற்றும் இறுதியாக குரோஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர் மோடி, 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக கடந்த திங்கள்கிழமை மாலை சைப்ரஸ் சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று கனடாவின் கால்கரிக்கு சென்றடைந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இதையடுத்து, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியா – கனடா […]
5 நாள் பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார். பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசி நாளான நேற்று மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி ஜி7 அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். “இந்தியா மற்றும் கனடா […]
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கை நிலைப்பாட்டைத் தொடர்ந்து, பல வங்கிகள் தங்கள் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் வட்டி விகித சுழற்சியில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கின்றன, பெரும்பாலான பெரிய வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களுக்கான விகிதங்களைக் குறைத்துள்ளன. அதாவது, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிகள் அறிவித்த சேமிப்பு […]

