ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சின்சினடா வசிஷ்டா பாலத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தையை தனியாக விட்டுவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, ஆற்றில் குதித்தவர்கள் வேல்பூரு கிராமத்தைச் சேர்ந்த சாய் (29) மற்றும் அவரது மனைவி ஷிரீஷா (28) என்பது தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், இந்தத் தம்பதியினர் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சீன எல்லைப் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பாக உள்ள நிலையில், 320 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள தகவலில், மானசரோவர் புனித யாத்திரைக்காக சென்ற […]
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் பெத்தமுப்பாரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தெல வீரன்னா என்பவருக்கு, கடந்த 1983-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் வாராங்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், அதே ஆண்டு டிசம்பரில் 3 மாத கால பரோலில் வெளியே வந்தார். ஆனால், பரோல் காலம் முடிந்த பின்னர் சிறைக்குத் திரும்பாமல் மாயமானார். காவல்துறை அவரைத் தேடி வந்த நிலையில், தனது அடையாளங்களையும் தண்டனை […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் வயல்வெளிப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]
இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதோடு, downstream எனப்படும் கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள நீர்மின் திட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. ஐஐடி ரோபார் மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை 1990-ல் இருந்த 107 என்ற கணக்கிலிருந்து 2024-ல் […]
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாவன் மாதத்தில்(ஆடி மாதத்திற்கு நிகரானது) மட்டன் கேட்ட 30 வயது மகனை, அவரது தந்தை ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் வார்ஜே-மால்வாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பகவத் சூர்யபான் கெய்க்வாட். இவரது மனைவி பார்வதி பகவத் கெய்க்வாட். இவர்களுக்கு மகேஷ் என்ற மகன் (30) உள்ளார். இந்தநிலையில், தமிழர்கள் ஆடி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பதை போலவே, இவர்களின் […]
போதைப்பொருள் பழக்கத்தைத்தடுப்பதிலும், ஆரோக்கியமான வலிமையான சமூகத்தை கட்டமைப்பதிலும் விளையாட்டுகள் மிக முக்கியப் பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேலோ இந்தியா மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தலைசிறந்த சாதனைகளைப் படைக்க வேண்டுமெனில், பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் நமது வீரர்கள் பரவலாக பங்கேற்க வேண்டும் என்றார். […]
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் உருவான கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் மாயமானவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் […]
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள அரசுடன் இணைந்து இந்தியாவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் […]
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உருவாகி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கங்கையின் கிளை நதிகளான கோஷி மற்றும் கண்டக் (நாராயணி) ஆறுகளில் வெள்ளநீர் அபாய அளவைத் தாண்டிப் பெருக்கெடுத்து வருவதால், அண்டை […]

