இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண முறைமை (Unified Payments Interface – UPI) அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், யுபிஐ அமைப்பின் அளப்பரிய வளர்ச்சியையும், அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்திருப்பதையும் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தமிழ்நாடு – கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனையால், நடப்பாண்டிலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகவும், ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்குக் கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து உரிய நீர் பங்கு வழங்கப்படாததால் நீர் […]
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபோன் வரிசையின் அறிமுகத் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், கியூபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி iPhone 18 Pro அறிமுக விழா நடைபெறக்கூடும் எனப் பல்வேறு தொழில்நுட்ப அறிக்கை கசிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இத்துடன் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone) பற்றிய அறிவிப்பும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது செப்டம்பர் 8-இல் நடக்கலாம் […]
கேரளாவை சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ என்ற 19 வயதே ஆன இளம்பெண், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 மகுடத்தை சூடினார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில், கேரளாவின் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான சட்டக்கல்லூரி மாணவி கஸியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo) ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்றுள்ளார். 52 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், அவருக்கு முந்தைய வெற்றியாளரான மனிகா […]
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், பகலில் கணவருடனும் இரவில் காதலனுடனும் ஒரே வீட்டில் இணைந்து வாழ அனுமதி கோரி காவல் நிலையத்தில் வைத்த விசித்திரமான கோரிக்கை அங்கிருந்த போலீசாரையே நிலைகுலைய வைத்துள்ளது. சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு வர்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சுவிற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நிதின் விஸ்வகர்மா என்ற வாலிபருடன் […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலிஃபிளவர் சார்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. சமீபத்தில் உணவகங்களுக்குக் கொண்டுவரப்பட்ட காலிஃபிளவர்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் எவ்வித சுகாதாரக் குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கோபி மஞ்சூரியன், […]
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்து சிறப்புப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக இன்று (ஆகஸ்ட் 24) பெய்ஜிங் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. செப்டம்பர் 12, 13 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் […]
உணவுப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள், தயாரிப்பு லேபிள்கள் மற்றும் நிறுவனங்களின் விதிமுறை இணக்கத்தை தீவிரமாக கண்காணித்து வரும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பல்வேறு உணவு மற்றும் குளிர் பான நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் உணவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள், […]
பெங்களூருவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக அவரது உடல் அமைப்பை விவரித்து பில்லில் அச்சிடப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ‘சப்கோ தி கிராப்டரி’ (Subko The Craftery) என்ற உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு உணவை உட்கொண்டுவிட்டு பில்லைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். பில்லில் வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக “Little fat black shirt” […]
மும்பையின் புலேஷ்வரம் பகுதியில் புகழ்பெற்ற ‘புலேஷ்வரச்சா ராஜா விநாயகர் சிலையைக் கொண்டு செல்லும் ஊர்வலத்தின் போது, பிரம்மாண்டமான சிலை திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 22) சுமார் 9:51 மணியளவில் புலேஷ்வரத்தில் உள்ள கபூர்கானா அருகில் உள்ள ஜெய அம்பே சவுக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பிரிஹன்பும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விபத்து எப்படி நடந்தது? […]

