நேபாளத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முழு தயார் நிலையில் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இந்த இக்கட்டான பேரிடர் காலகட்டத்தில், நேபாளத்தின் சகோதர, சகோதரிகளுக்குத் துணை நிற்பதில் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
Nepal Floods | நேபாள நாட்டின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி(Bhotekoshi)ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான மக்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரை 17 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை […]
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய வணிக சமூகத்தினரிடையே உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக விளங்குவதாகவும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நிகரற்ற வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாரிய அளவு, நிலையான வளர்ச்சி, இளைய சமுதாயம், அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவை கனடிய முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்காத […]
அமெரிக்காவில் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டதன் எதிரொலியாக, நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘காமன் ஆப்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காமன் ஆப்’ என்பது அமெரிக்கா மற்றும் பிற 18 நாடுகளில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். கடந்த 2024-2025 கல்வி ஆண்டைக் காட்டிலும், 2025-2026 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் சேர விரும்பும் […]
மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தடுத்தல் மற்றும் பூச்சிக்கொல்லியின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நெல், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியான கார்போசல்ஃபான் (Carbosulfan) மீது மத்திய அரசு முழுமையான தடையைப் பரிந்துரைத்துள்ளது. இதன் நச்சுத்தன்மை மற்றும் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை […]
குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி மருந்துகள் குறித்து பெற்றோரிடையே உள்ள முக்கிய கவலையைத் தீர்க்கும் வகையில், இந்தியாவில் புதிய மருந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், குளோர்பெனிரமைன் மாலெட்டும் (chlorpheniramine maleate) பெனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடும் (phenylephrine hydrochloride) கலந்த கலவை மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த மருந்துக் கலவையை இந்த வயதுப் பிரிவினருக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற […]
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 30-ஆம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டும் கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழகம் தனது […]
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தமிட்டு விசித்திரமான முறையில் வலம்வந்த வாலிபருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வியூஸ்களை அள்ளுவதற்காக இவர் ஒரு விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். தனது தோழியை கொண்டு வெள்ளை நிற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் மீது சிவப்பு […]
இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண முறைமை (Unified Payments Interface – UPI) அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், யுபிஐ அமைப்பின் அளப்பரிய வளர்ச்சியையும், அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்திருப்பதையும் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் […]
தமிழ்நாடு – கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனையால், நடப்பாண்டிலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகவும், ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்குக் கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து உரிய நீர் பங்கு வழங்கப்படாததால் நீர் […]

