பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவினாலும், நீண்ட காலத்தில் பல துறைகளிலும் இந்தியாவின் முதன்மைப் போட்டியாளராக சீனா இருக்கப் போகிறது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனே நகரில் ரூபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட தனது புதிய புத்தகமான ‘தி கியூரியஸ் அண்ட் தி கிளாசிஃபைட்: அன்வெர்த்திங் மிலிட்டரி மித்ஸ் அண்ட் மிஸ்டரீஸ்’ (The Curious and […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
அரசுப் பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாகவும், மாணவர்களை விட “அமைச்சர்களின் நாய்களுக்கே சிறந்த வசதிகள் கிடைக்கின்றன” என்றும், மகாராஷ்டிர பள்ளி கல்வி அமைச்சர் தாதா பூசே பதவி விலக வேண்டும் என்று ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அமைப்பாளர் அபிஜீத் டிப்கே வலியுறுத்தினார். கடந்த வாரம் ‘ஸ்கூல் திக் கரோ’ (அரசுப் பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய அபிஜீத் டிப்கே , லாத்தூர் மாவட்டத்தின் அவுசா தாலுகாவில் உள்ள உஜனி […]
டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் மாநிலங்களுக்கு இடையேயான செல் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில், விலை உயர்ந்த போலி மற்றும் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த மாபெரும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ. 9 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை, ஐதராபாத், […]
மேகதாது அணை திட்டம் கர்நாடகாவுக்கானது அல்ல, அது தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை முன்னிறுத்தியுமே திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்படுவதன் மூலம் கர்நாடகாவிற்கு வெறும் 5 டிஎம்சி குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்படும் […]
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி என்பவர், அதே பள்ளியில் பயிலும் இரண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொந்தமல்லிப்பள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இக்கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்கள் இருவரின் ஆடம்பரச் செலவுப் பழக்கம் மற்றும் அவர்களின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து முதல்வர் ரூபா ரெட்டி கண்டித்துள்ளார். […]
இந்தியாவின் இளைய தலைமுறையினர்(‘Gen Z’) மற்றும் மாணவர்களுடன் மத்திய அரசாங்கத்தின் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ (One Day, One University) என்ற புதிய மற்றும் விரிவான மக்கள் தொடர்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மத்திய அமைச்சர் தினமும் ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பயணம் செய்து மாணவர்களை நேரடியாகச் சந்திப்பார்கள். நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் அமைச்சர்களிடம் நேரடியாகப் […]
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்காவைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவன், நீரில் இருந்து வெளியே வந்தாலே உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி பெரும்பாலான நேரத்தை கிராமத்துக் குளத்திலேயே கழித்து வருகிறான். இரவும் பகலும் நீரிலேயே இருக்கும் அச்சிறுவனுக்கு ஊர் மக்கள் உணவைக் குளத்திலேயே வழங்கி வருகின்றனர். குடும்பத்தின் நிதி நெருக்கடியால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ள நிலையில், […]
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள நான்கு மாடி ஹோட்டல் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதில் மருத்துவச் சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட […]
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாட்டா பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் 65 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உட்பட நான்கு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லம் பரவூர் பகுதியைச் சேர்ந்த சிவன்குட்டி செட்டியார் என்பவர் தனது 13 வயது பேத்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டிக்கிடந்துள்ளது. 8-ஆம் வகுப்பு […]

