கர்நாடகாவின் சடாச்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையில் நேற்று ஆயுதமேந்திய கும்பல் ஒன்று கொள்ளையடித்து, பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது. 5-க்கும் மேற்பட்ட நபர்கள் இராணுவ பாணி சீருடையில் வந்து, அடையாளம் தெரியாமல் இருக்க முகங்களை மூடிக்கொண்டிருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன், வணிக நேரத்தில் கிளைக்குள் நுழைந்தனர் என்று […]

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் AI வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தற்காலிக தலைமை நீதிபதி பி.பி. பஜந்தரி பிறப்பித்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது கனவில் மறைந்த தாயார் ஹீராபென் கனவில் பார்ப்பதை போலவும், அவர் வாக்கு திருட்டு குறித்து தனது மகனுக்கு அறிவுரை கூறியது போலவும் உருவாக்கப்பட்ட AI வீடியோவை காங்கிரஸ் கட்சியின் […]

வருமான வரி செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். குறிப்பாக, கோடிகளில் சம்பாதிக்கும் திரையுலக பிரபலங்கள், ஆண்டு வருமானத்திற்கேற்ப பெரும் தொகையை வரியாக செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்திய டாப் 10 திரைப்பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் : ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடப்பு நிதியாண்டில் ரூ.92 கோடி வரி செலுத்தி முதலிடத்தில் உள்ளார். இவரது […]

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில்குமார் (38). இவர் மளிகைக் கடையையும் நடத்தி வந்தார். இவரது மனைவி தன்யா (34) மளிகை கடையை நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அனில்குமார் தனது கடைக்கு வந்தபோது, மனைவி தன்யா அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமார் (40) என்பவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை கணவர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொது இடத்தில் […]

இன்று செப்டம்பர் 17, பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள். கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட பல திட்டங்களை உலகம் முழுவதும் வியப்புடன் பார்த்து வருகிறது. கொரோனா போன்ற நெருக்கடி காலங்களிலும், முழு உலகப் பொருளாதாரமும் கொந்தளிப்பில் இருந்தபோதும், இந்தியா இந்தியப் பொருளாதாரத்தை மேல்நோக்கி எடுத்துச் சென்றுள்ளது, இன்று அது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படுகிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக […]

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல் குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயேஷ் ராஜப்பன் (25) – ராஷ்மி (23) தம்பதி. இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முன்பே காதலித்தபோது, ஜெயேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, இருவரும் தங்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பொருளாதார நெருக்கடியால், சொகுசு வாழ்க்கைக்காக இவர்கள் ஒரு கொடூர […]

“ஆபரேஷன் வீட் அவுட்”- ன் கீழ் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 108.67 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் “ஆபரேஷன் வீட் அவுட்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் […]

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை கிட்டத்தட்ட 49,573 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கொசுக்களால் பரவும் நோயால் 42 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 2,33,519 டெங்கு பாதிப்புகளும் 297 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை டெல்லியில் 964 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே […]

தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]