பத்ம ஸ்ரீ விருது பெற்ற விளம்பரத் துறையின் ஜாம்பவானான பியூஷ் பாண்டே இன்று காலை காலமானார்.. அவருக்கு வயது 70.. இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கோமாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது தொழில் வாழ்க்கையில், இந்திய விளம்பரத் துறையில் ஏராளமான ஐகானிக் விளம்பர பிரச்சாரங்களுக்குப் பின்னால் இருந்தவர் ஆவார்.. பியூஷ் பாண்டேவின் சகோதரி இலா அருண் ஒரு அறிக்கையில் அவரது மறைவை உறுதிப்படுத்தினார். அவர் […]

மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளி கொண்டாட்டங்களின் போது 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்களில் பலத்த காயம் அடைந்ததாகவும், 10 பேர் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து கால்சியம் கார்பைடு துப்பாக்கிகளை விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு மத்திய பிரதேச அரசு முழுமையான தடை விதித்துள்ளது. பட்டாசுகளின் சத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கால்சியம் கார்பைடு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி வெடிக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்தியதால் பல […]

2025 நவம்பர் 1 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்வில், முதல்வர் பினராயி விஜயன், கேரளாவை தீவிர வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.. இதன் மூலம் ​​கேரளா வரலாறு படைக்க உள்ளது. இந்த அறிவிப்பு கேரளாவிற்கு ஒரு மைல்கல் சமூக சாதனையாகும், இது தீவிர வறுமையை ஒழிக்கும் முதல் இந்திய மாநிலமாக மாறும்.. பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக […]

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை (CJI) நியமிக்கும் செயல்முறையை மத்திய அரசு வியாழக்கிழமை (அக்டோபர் 23) தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த மாதம் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி கவாய் தனது வாரிசை பெயரிடக் கோரிய கடிதம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையை அறிந்தவர்கள் பிடிஐ […]

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திற்கு அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் பேருந்து தீபிடித்து எரிந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காவேரி டிராவல்ஸ் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், காலை 3 மணி அளவில் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே சென்றுக்கொண்டிருந்த மீது இருசக்கர வாகனம் […]

பீகாரைச் சேர்ந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கூட்டணி ‘கத்பந்தன்’ அல்ல, மாறாக ‘லத் பந்தன்’ (குற்றவாளிகளின் கூட்டணி) என்று கூறினார். ஏனெனில் டெல்லி மற்றும் பீகாரைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்று சாடினார்.. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தங்களுக்குள் சண்டையிட மட்டுமே தெரியும், மேலும் அவர்களின் சுயநலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய […]

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 122 குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் 14 பேர் கார்பைடு துப்பாக்கிகள் என்று அழைக்கப்படும் வெடிக்கும் சாதனங்களால் பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 18 அன்று மாநிலம் தழுவிய தடை விதிக்கப்பட்ட போதிலும், உள்ளூர் சந்தைகள் இந்த கச்சா, தற்காலிக சாதனங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ரூ.150-200க்கு விற்கப்படும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட கேஜெட்டுகள் பொம்மைகளை போலவே […]

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தில், விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவியை அவரது தாத்தாவாக நடித்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிந்து மாதவ் கரிகாபதி அளித்த தகவலின்படி, டி. நாராயண ராவ் என்ற அந்த முதியவர், அரசுப் […]

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்கொண்டனஹள்ளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 27 வயதான அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள், நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அந்தக் கும்பல், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரை மிரட்டி […]

பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன், விஐபி தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த முடிவை வெளியிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், ஆளும் NDA மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார்.. […]