அரசியல் கட்சிகள் சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 8 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கையை 2025 அக்டோபர் 6 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சமூக ஊடகம் உட்பட மின்னணு ஊடகத்தில் வெளியிடுவதற்கான அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்னதாக சான்றிதழ் பெறுவதற்கு ஊடக […]

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது” என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை […]

அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு தொடங்கியது.. இந்த திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.. நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் என 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீண்டும் […]

சென்னை திருவான்மியூரில் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர், அடையாறில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான குணசேகரன் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘தீப ஒளித் திருநாள்’ எனப் போற்றப்படும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் தனிச் சிறப்புகளுடன், அலாதியான மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே, வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்களின் மனக்கண் முன் நிற்பது சொந்த ஊரும், அங்கே காத்திருக்கும் குடும்பமும்தான். வருடத்தின் இந்த ஒரு நாளுக்காகவே, பெரு நகரங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள். தீபாவளி பண்டிகை என்பது, நரகாசுரனை […]

திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக  சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 இலட்சம் செலவில் “அரண்” திருநங்கையர்களுக்கான இல்லங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சமூகத்தில் திருநங்கையர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மரபு சார்ந்த “அரவாணிகள்” என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருநங்கைகளுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி, அவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, […]